சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

 

 

 

 

 


 

மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு,

வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப்
பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக
இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக
இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி.

பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது.
கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று
தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற
சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த
ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று
மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில்
நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு
வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி
எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏறத்தாழ
லெவி சர்க்கரை தரம். இந்த வகையில் பிராண்டு சர்க்கரை என்பது சற்று விலை
குறைவாகவும் தரம் நிறைவாக இருந்தாலே மார்க்கெட்டை எளிதாக பெற்று நிலைத்து
நின்றுவிடமுடியும். தங்களுடைய செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். நன்றி!



 -------------------------------------------------------------------------------

 

 

 

அய்யா,

 

வணக்கம். உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி!

 

நாங்கள் வழங்கும் பொன்னி சில்லறை சர்க்கரை பற்றிய உங்கள் அனுபவத்தையும், தரம் குறித்து கூறிய பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறோம். தயாரிப்பு தரத்தை நிலைத்திருக்கச் செய்வதுடன், பேக்கிங் மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

 

விலை குறித்து தெரிவித்ததற்கும் நன்றி. விற்பனை நிலவரத்தையும், சந்தை மாறுபாடுகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் விலை நிர்ணயத்தில் கவனமாக செயல்படுகிறோம். எங்கள் பொன்னி சர்க்கரை அதிகமான மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

 

உங்கள் ஆதரவுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் நன்றி. எங்கள் சேவையை மேலும் சிறப்பாக உருவாக்க, உங்கள் மேலான ஆலோசனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

 

நன்றியுடன்,

பொன்னி சர்க்கரை ஆலைக்காக்க,

(கே. யோகநாதன்)
சீனியர்  தலைவர்
& முதன்மை நிதி அதிகாரி

 

 

 

பொதுவாக இப்படி கேள்வி கேட்டால் கருத்துகளை சொன்னால் அதை பொருட்படுத்தாத ஆட்களே அதிகம். அந்த வகையில் திரு. யோகநாதன் அவர்களுக்கு நன்றி. வணிகத்தை பெரிய அளவுக்கு வளர்க்க ஆர்வமாக இருக்கிறார். தவறில்லை. நிச்சயம் அதை நிர்வாகமாக சேர்ந்து சாதிப்பார்கள். விலையை முன்னமே குறிப்பிட்ட அளவுக்கு அச்சிட்டு அதை நோக்கி மக்களை மெல்ல கொண்டு செல்வது என்ன வித விநியோக முறையோ தெரியவில்லை. இருந்தாலும் அது அதிகபட்ச விலைக்குள் உள்ளது. அதுதான் ஒரே மகிழ்ச்சி. பல்பொடி கம்பெனி கூட இரண்டு ரூபாய் பல்பொடியை ஐந்து ரூபாய்க்கு விற்கும்போது இது அந்தளவு அயோக்கியத்தனமாக மாறவில்லை அல்லவா?

பணவீக்கம் அதிகரிக்கும்போது எண்ணெய்யை குறைத்து வாங்குங்கள். சோற்றை தட்டில் குறைவாக போட்டு சாப்பிடுங்கள் என கிறுக்குத்தனமாக பேசுபவர்கள் ஆட்சித்தலைவர்களாக இருக்கும்போது இந்த நாட்டில் என்னதான் நடக்காது?

சர்க்கரை ஆலைக்காரர்கள், பணவீக்கத்தை பயன்படுத்தி லாபம் பார்க்கத்தான் முயல்வார்கள். இப்படித்தான் முன்னும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. அநீதிகள் இயல்பானதாக மாறுகிறது. 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்