வரி உட்பட அதிகபட்சவிலை என்பது நகைச்சுவையா?
மதுரையைச் சேர்ந்த பல்பொடி நிறுவனம். பல்பொடி, அலுப்பு மருந்து என விற்று இன்று அதே பல்பொடியில் பற்பசை அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பல்பொடி பிராண்ட் பத்து கிராம் அளவுகொண்ட பாக்கெட் ரூ.2 விலை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஐந்து ரூபாயில் விற்கிறார்கள். அப்போது ரூ.2 என விலையை அச்சிட்டுள்ளது நகைச்சுவைக்காகவா? ஐந்து ஆண்டுகள் என காலாவதி காலத்தை அச்சிட்டுள்ள துணிச்சலான நிறுவனம், விலையை ஏன் இப்படி மாற்றி விற்க வேண்டும் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் பல்பொடியை, சித்த மருத்துவம் என்று வேறு போட்டு அதையும் கீழான நிலைக்கு கொண்டுவருகிறார்கள்.
வியாபாரிகள் இன்று அரசியலில் வலிமை பெற்று வருவதால், குறைகளை சுட்டிக்காட்டினால் கூட சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து மிரட்டும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக