எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்!
1
மதிப்பிற்குரிய எழுத்தாளர் கே செல்வேந்திரன் அவர்களுக்கு வணக்கம்.
நகுமோ லேய் பயலே என்ற உங்களது நூலை வாசித்தேன். கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பார்த்தமுகம், தூஸ்ரா ஆகிய கட்டுரைகள் எனக்கு பிடித்திருந்தது.இலக்கியக் கட்டுரைகளில் மாசனமுத்து எழுதிய பொன்மொழிகள் கட்டுரை சிறப்பாக இருந்தது. நன்றி!

2
மதிப்பிற்குரிய எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு,
வணக்கம். அண்மையில் தங்களுடைய உறைப்புளி என்ற கட்டுரை நூலைப் படித்தேன். ஸ்டார்ட்அப் தொழில் தோல்வி, பழந்தின்னி வௌவால், எழுத்தாளர் க.சீ சிவக்குமாருடனான எழுத்தாளருடனான உறவு, நூல் வாசிப்பு பயன் என பலதரப்பட்ட வாசிப்புக்கு ஊக்கமளிக்கும், உற்சாகத்தோடு வாசிக்கும்படியான அம்சங்கள் நூலில் இருந்தன. நாளிதழை விநியோகம் செய்பவர்கள் பற்றிய கட்டுரை, குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்தாலும், ஒரு சிறுகதை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. அதில், ஆங்கில நூலொன்றையும் பரிந்துரை செய்திருந்தீர்கள். வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சி.
இறுதிக்கட்டுரை, கல்லூரியில் ஆற்றிய உரை. நூல்களை வாசிக்கும், விரும்புகிற, ஆவல் கொண்ட ஒருவரால்தான் அப்படி பேச முடியும் என நினைக்கிறேன். தங்களுடைய கட்டுரையில் கூறியுள்ள கருத்துகளின் வழியாக நூல் வாசிப்பு பற்றிய தெளிவை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. பிறருக்கு சொல்லும் பதிலாக அல்ல. காலப்போக்கில் நமக்கே சில கேள்விகளுக்கு பதில்கள் தேவையாக உள்ளன. எழுத்தாளராக, சொற்பொழிவாளராக தங்களுடைய நூல் வாசிப்பு வேகத்தை, பலதரப்பட்ட வாசகர்களும் பெற முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதுபற்றி தங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை அறிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துகள்.நன்றி!

கருத்துகள்
கருத்துரையிடுக