இடுகைகள்

ஜாலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாலிப்பக்கம் - சிரித்து இறந்துபோன ஸ்பெயின் மன்னர்! - சிரிப்பே சிறப்பு!

படம்
  சிரித்தால் சிறப்பு! சிரிப்பு என்பது வாழ்க்கையின் அழுத்தங்களை குறைக்க உதவுகிறது.  ஆனால் அதுவே ஓவர் டோஸாக போனால் என்னாகும் என்பதற்கு கீழேயுள்ள மனிதர்கள்தான் எடுத்துக்காட்டு.  சண்டையும் காமெடிதான்! 1975 ஆம் ஆண்டு அலெக்ஸ் மிட்செல், பிரிட்டிஷ் காமெடி நிகழ்ச்சியான தி குடிஸ்(The goodies) பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்நாக்ஸை பரவசமாக தின்றுகொண்டே பார்த்தவருக்கு, அதில் வரும் சண்டைப் பயிற்சிக் காட்சிகளைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்பு வந்தது.   வாயைப் பொத்தி, உதடுகளை மூடி ... ம்ஹூம் நான்ஸ்டாப் சிரிப்பில்  காப்பாத்துங்க என்றுகூட சொல்லமுடியால் மாரடைப்பில் இறந்துபோனார். மரபுவழியாக க்யூடி(Qt Syndrome) பாதிப்பு கொண்டவருக்கு சிரிப்பு அட்ரினல் சுரப்பைத் தூண்டி இறப்பை ஏற்படுத்தியுள்ளது பின்னர் தெரிய வந்தது. அவரது மனைவி, என் கணவர் இறக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தார். அதுவே எனக்கு போதும் என்று பேட்டி தட்டினார்.  நிற்காத சிரிப்பு 1792 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த திருமதி ஃபிட்ஸெர்பெர்ட்,  ட்ரூரி லேன் எனுமிடத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற இசைநாடகத்தை ஆசையாகப் பார்த்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் ல

மூன்று வேலைகளில் முன்னேறிய அரசு ஊழியர் - பீகார் பரிதாபம்

படம்
ஆஹா! மூன்று வேலையில் முப்பது வருடங்கள்! அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம். அதுவும் விண்ணப்பித்த மூன்று வேலைகளுமே கிடைத்தால் என்ன செய்வீர்கள்? நல்ல சம்பளம், எதிர்கால புரமோஷன் ஆகியவற்றை யோசித்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள். பீகார்காரர் தனக்கு மூன்று வேலைகளும் தேவை எனத்தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் பணியாற்றி சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஆதார் கார்டு கேட்க தடுமாறி மாட்டிக்கொண்டுவிட்டார். இதன் அர்த்தம் அவரைப்பிடித்து விட்டார்கள் என்பதல்ல; தப்பித்து தலைமறைவாகிவிட்டார் என்பதுதான். கிஷன்கன்ச் பகுதியில் கட்டுமானத்துறை உதவிப் பொறியாளராக வேலை பார்த்த சுரேஷ் ராம்தான் இத்தகைய வேலையைப் பார்த்த திறமைசாலி. 1988 ஆம் ஆண்டு பாட்னாவில் ஜூனியர் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தார் ராம். பின்னர்தான் நீராதாரத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணி வாய்ப்பு கிடைத்தது. அனைத்தையும் ஆண்டவனே கொடுத்தான் என வாங்கிப்போட்டுக்கொண்டவர், அத்தனைக்குமான சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் நிதிதொடர்பான பணிக்கான அவரது பணி, சம்பளம், ஆதார் கேட்க தயங்கியவர் பின்னர் தலைமறைவாகியிருக்கிறார்