இடுகைகள்

அமானுஷ்யம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும் உள்ளன . எனவே இந்த மம்மி மனிதர்களுடன்

மூன்று பேரின் இறப்பிற்கு காரணமாக குடும்பத்திற்கு கருப்பசாமி வழங்கும் நீதி! விட்டுவிடு கருப்பா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                விட்டுவிடு கருப்பா இந்திரா சௌந்தர்ராஜன் ரத்னா நகரில் வேலை பார்த்து வருகிறாள். அவள் மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில் அரவிந்தும் மருத்துவர். கூடவே அவளைக் காதலித்தும் வருகிறான். காதல் புரிந்தாலும் ரத்னா கண்டும் காணாததுமாகவே இருக்கிறாள். என்ன காரணம் அவளது புத்திசாலி பகுத்தறிவுவாதியான தோழி ரீனா கேட்கிறாள். அதற்கு அவளது ஊரைச்சேர்ந்த கருப்பசாமி யாரை கைகாட்டுகிறதோ அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ளமுடியும்.இல்லையென்று மறுத்தால் உயிர் காலி என்கிறாள். அதற்கேற்ப ரத்னாவின் குடும்பத்தில் பல்வேறு துர்மரணங்கள், விபத்துகள் ஏற்படுகின்றன. உண்மையில் இதெல்லாம் அமானுஷ்யமாக இருக்கிறது என ரீனா துப்பறிய கிளம்புகிறாள். அதில் அவள் கண்டுபிடிக்கும் சமாசாரங்கள்தான் கதையில் முக்கிய திருப்புமுனை. நாயக்கர் பங்களாவில் வரும் கடைசி பகுதி ட்விஸ்ட் இதிலும் உண்டு. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்பதுதான் நெருடல். ஊர் பஞ்சாயத்து தலைவரான தேவர், பக்தியை விட பணத்தை அதிகம் நம்புபவர். அவரின் மனைவிக்கு குடும்பம் நன்றாக வாழவேண்டுமென்ற  ஆசை. அவளது மாமியார் வட்டிக்கு பணம் கொடுத்து ஊர் சாபத்தை வாங்கிக்கொண்டாலும் எதையும்

மனதின் இருளைப்பேசும் படம்- மனு - துரத்தும் துயரத்தின் தடம்!

படம்
மனு - தெலுங்கு இயக்கம் - பனிந்திரா நசரேட்டி ஒளிப்பதிவு - விஸ்வநாத் ரெட்டி இசை - நரேஷ் குமரன் கதைக்கரு: சொல்லமாட்டோம். கதையின் பாதையை வேண்டுமானால் சொல்லலாம். ஒரு பார். அங்கே ஒரு பெண் அமர்ந்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் பேச்சிலிருந்து ஆண், ஓவியர் என்று தெரிகிறது. அப்போது ஓவியரின் செய்கை அப்பெண்ணுக்கு எரிச்சலூட்ட அப்பெண் மதுவை அவரின் சட்டை மீது ஊற்றி விட்டு கோபமாக எழுந்து போகிறாள். பாரின் மூலையில் இருப்பவன், கையில் இருந்த தாளைப் படித்துவிட்டு ஆத்திரமுறுகிறான். அதில் அவன் பணத்தை கட்டாவிட்டால் இரண்டாவது சிறுநீரகமும் பிடுங்கப்படும் என்று எழுதியிருக்கிறது. பின் அப்பெண் கோபமாக நடந்துகொள்வதைப் பார்க்கிறான். மதுவைக்குடித்துவிட்டு மெல்ல எழுந்து அவளை பின் தொடர்கிறான். ஓவியர், பார் சர்வரிடம் மேலும் மது வாங்கி அருந்துகிறார். அப்போது அங்கு இன்னொரு வயதானவர் வருகிறார். தன் கையில் எதையோ ரசித்துப் பார்க்கிறார். திடீரென வாசல் பக்கம் பார்த்தால் மூவர் அந்த வயதானவரை வெறித்து பார்த்துவிட்டு அவரை நோக்கி வருகின்றனர். இதுபோதும்... காட்சிகளாக இவ்வளவு கூறினால் போதுமானது

நிழல் இல்லாத பைசாசிகம்! - கோட்டயம் புஷ்பநாத்

படம்
நிழல் இல்லாத மனிதன் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் -  சிவன் கேரளத்திலுள்ள பிரபலமான மருத்துவமனை சிட்டி ஹாஸ்பிடல்ஸ். இதன் உரிமையாளருக்கு காசும் தேவை அதோடு அதன் மூலம் நிறைய புகழும் தேவை. இதற்காக மருத்துவச்சேவை செய்துவருகிறார். கூட்டம் அள்ளுகிறது.  கூடுதலாக இதய மாற்று மருத்துவம் சார்ந்த படிப்புக்கு லூயிஸ் என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். இவருக்கு தன் பெண நான்சியைக் கட்டிக்கொடுத்து தன் சொத்தையும் மருத்துவத் தொழிலையும் நடத்தும் எண்ணம் அவருக்கு.  அப்போதுவரை மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஸ்டீபன். அவருக்கும் ஷைனி என்ற நர்ஸ் ஒருவருக்கும் கசமுசா என மருத்துவமனை கிசுகிசுக்கும் அளவு நெருக்கம் செல்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் வேலை போய்விடும். மருத்துவமனை உரிமையாளர் நர்ஸ்களை அழகு என்ற காரணத்தை வைத்து மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்.  கல்யாணம் செய்தால் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள் என்பதால், ஆன்டிகளுக்கு அங்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஜோடிகள் என்ன செய்வது என்றபோதுதான் லூயிஸ் உள்ளே நுழைகிறார். லூயிஸ் உள்ளே நுழைந்த பிறகு, அங்கு நடக்கும் ஆபத

சிவன் ஆடும் தாண்டவம்! - கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்!

படம்
தாண்டவம் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் ஹரி கிருஷ்ணன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அப்பா காசிக்கு போகும்முன்பு கொடுத்த ஓலைச்சுவடிகளை வாசிக்கிறான். அதில் எழிமலைக்காவு கோவில் பற்றி தகவல்கள் இருக்கின்றன. அங்கு போகவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது. அந்த ஊருக்குச் சென்றால் தங்குமிடம் கறையான்கள் அரித்துக் கிடக்கிறது. அங்கு சென்று மோகினிகளோடு சேர்ந்து துர் மந்திரவாதிகளோடு போரிட்டு தேவியை வெளியே கொண்டு வருவதுதான். கதை. ஸ்பெஷல் என்ன? கோபிகா, ஸ்ரீதேவிக்குட்டி, நாகவதி, விஷ்ணுப்பிரியா ஆகியோர்தான் ஹரி கிருஷ்ணனின் இன்ஸ்டன்ட் காதலிகள். இதில் நாகவதிக்கு இடம் அதிகம். நாகவதியும் பெண் கிடையாது என்பது ட்விஸ்ட். புஷ்பநாத் பொதுவாக சர்ச், லூசிபர் என்றால் கதையை மேலே நகர்த்த தடுமாறுகிறார். ஆனால் தறவாடு, கோவிலகம், பகவதி என்றால் கையில் கூடுதல் பலம் வருகிறது. மோகினிகள், பைசாச சக்திகள், கருடன், யட்சினி, தேவி ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி பரவசத்தைத் தருகிறார். இதில் ஹரிக்கு வில்லன்கள் அதிகம். அதேசமயம் ஹரி தன் செய்யும் உதவிக்கு பரிகாரமாக மோகினிகளின் பாலைப்பூ, தாமரைப்பூ

மாந்த்ரீகனுக்கு எதிராக காதல் மந்திரம் - கோட்டயம் புஷ்பநாத்தின் சூப்பர் நாவல்!

படம்
புத்தக விமர்சனம் காதல் மந்திரம் கோட்டயம் புஷ்பநாத்! தமிழில்: சிவன் உதயநல்லூர் என்ற ஊரில் நடக்கும் மாந்த்ரீகச்சண்டை. அங்கு அரண்மனையில் வாழும் கார்த்தியாயினி எனும் இளவரசிக்கும், பிரம்ம தத்தன் என்ற நம்பூதிரி வம்சத்திற்கு பழங்கால பகை உள்ளது. இளவரசி முந்நூறு ஆண்டுகளாக பிரம்ம தத்தனை பழிவாங்கி தேவியின் கையிலுள்ள ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நினைக்கிறாள். பிரம்ம த த்தனுக்கும் அதே ஆசைதான். ஆனால் அது நிறைவேறுவதற்கான வழி இளவரசிக்கு தெரியவில்லை. ஆனால் பிரம்ம த த்தன், இளம்பெண்களை பலியிட்டு அந்த வழியை சென்றடை முயற்சிக்கிறார். ஊரில் இருக்கும் பெண்களை பலாத்கார வல்லுறவு செய்து கொன்று துர்சக்திகளுக்கு பலியிடுகிறார். நாற்பது பெண்களை பலியிட்டால் நான் வில்லாதி வில்லன், மகா மாந்த்ரீகன் என கொக்கரிக்கிறார் பிரம்ம த த்தன். அவருக்கு தன்னார்வமாக வந்து உன்னைக் கொல்வேன் என்கிறார் கேசவன் குட்டி. ராகவன் குறுப்பு என்பவரின் மருமகன். நகரத்தில் படித்தவன். ஆச்சா? இனி கதையை நான் சொல்ல வேண்டுமா? அதேதான். பிரம்ம த த்தனின் மருமகளை கர்ப்பவதியாக்கி பிரம்ம த த்தனை கூண்டோடு பொலி போட்டு, தேவியிடம் ஆசிர்வாதம் வாங

அதிரவைக்கும் பழிக்குப்பழி - இது கோட்டயம் புஷ்பநாத் கோட்டா!

படம்
பிரம்ம ரட்சஸ் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் திருமகள் புத்தக நிலையம் தறவாட்டில் வாழும் ராஜ வம்ச பெண் கார்த்திகா அந்தர்ஜனம். அங்கு பணியாற்றும் வாசுதேவன் தம்பி, அவளை திருமணம் செய்வதாக கூறி சொத்துக்களை ஏமாற்றப் பார்க்கிறான். அதனை தேவி கார்த்திகாவிடம் கூறிவிட, அவள் அவனை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாள். ஆனால் வாசுதேவன் தன் நண்பர்களுடன் எழுமாற்றூர் அரண்மனைக்குச் சென்று அவளை பலாத்காரம் செய்து கொல்கிறான். அவளது உடலை குளத்தில் மிதக்கவிடுகின்றனர். ஊரே வாசுதேவனின் செல்வாக்குக்கு முன்பு ஒன்றும் செய்யமுடியாமல் பதுங்குகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? வாசுதேவன் நல்ல வரும்படியான இடத்தில் கல்யாணம் முடிக்கிறார். அதற்காக காத்திருந்த கார்த்திகா, பிரம்ம ரட்சஸாக எழுந்து வாசுதேவனை பழிவாங்க புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுகிறார். அவர் ஆடும் ரிவென்ஞ் ஆட்டம்தான் பிரம்ம ரட்சஸ். காதல், துரோகம், பேராசை, நிரம்ப காமம் என அனைத்துமே இதில் உண்டு. தன் பழிக்குப்பழி வாங்குவதற்கு திருமேனி ஒருவர் தேவை என கார்த்திகா உணரும்போது அங்கு மாந்த்ரீகம் கற்க வருகிறார் விஜயதேவன். முதலில்