இடுகைகள்

பொறாமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

காதல்,பேராசை, பொறாமை - மூன்று உயிர்கள் பலி -பியோம்கேஷ் வெப்சீரிஸ்

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் பியோம்கேஷ் சீசன் 3 ஷாஜாரூர் கந்தா அனிர்பன் பட்டாச்சார்யா சுப்ரதா த த்தா ரிதிமா கோஷ் பேனா நிப் ஒன்றால் பிச்சைக்கார ர், கடைக்காரர் என அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்ததாக யார் சாவார்கள் என மேற்கு வங்காளமே ஆவலோடு எதிர்பார்க்கும்போது தொழிலதிபர் தேவிஷ் பன்றி முள்ளால் தாக்கப்படுகிறார். ஆனால் அதில் ஒரு திருப்பம். தொழிலதிபர் தப்பித்து விடுகிறார். எப்படி? உண்மையில் இந்த பேனா நிப் கொலைகாரர் யார் என்பதை பியோம்கேஷ் கேள்வி கேட்டு, நாடகம் போட்டு டான்ஸ் ஆடி கண்டுபிடிக்கும்போது வருவது வேறு என்ன? எரிச்சலும் கொட்டாவியும்தான். பெரிய திருப்பங்கள் ஒன்றுமில்லை. காதல்தான் அனைத்து களேபரங்களுக்கும் காரணம். திறமை இருந்தால் காசு இருக்காது. காசிருப்பவர்கள், தம் மீது வயிற்றெரிச்சல் படுபவர்களுக்கு தரவேண்டும் என்பது என்ன தலைவிதியா?  தீபா என்ற முகர்ஜி குடும்ப பெண், பத்தாவது படித்து முடிக்கிறார். அப்போதே அவருக்கு கல்யாணம் என்கிறார் அவரின் தாத்தா. ஆனால் தனக்கு பிடித்த வேறு ஜாதி காதலனுடன்தான் கல்யாணம்  என்று என்கிறார் தீபா. அந்தக் காதலர் யார் என அடித்தாலும் சொல்ல மறுக்க

லவ் இன்ஃபினிட்டி: நீ என்னிடம் மட்டும் பேசேன் தோழி

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட் அணைதாண்டி வெள்ளமாய் விரைந்தோடி வரும் ஆற்றிடம் விலாசம் கேட்க முடியுமா? அதுபோலத்தான் இத்தனை குறைகளிலிருந்தும் என்னிடம் சில குறைகள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியில் சொல்வதால் நிறைய விளைவுகள் விளைந்திருக்கின்றன. வெளுத்ததெல்லாம் சோறு என்று நம்பும் வெகுளி நான். எல்லா பசங்களும் விவரமா இருக்காங்க நீயும் இருக்கிறயே என்றாள் அம்மா. தொண்டு சுத்துறத நிறுத்திட்டு உருப்படற வழியப்பாரு என்றார் அப்பா. வசவுகளை வாங்கிக்கொண்டு யோசித்தேன். எப்படி இந்த உலகில் வாழப்போகிறேன்? என்னால் சராசரியாக வாழ முடியாது. வாழத் தெரியாது. வாழவும் மாட்டேன். சாதனையாளன் சராசரி வாழ்க்கை நடத்தலாமா? நிரந்தரமானவன் சரித்திரம் படைப்பவன் சாவைக் கண்டு பயப்படலாமா? இந்த உலகம் மட்டம் தட்டும் முட்டாள்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. பணம்தான் வாழ்க்கை என்று வரைமுறை தந்தவர்கள் ஏராளம். பணத்தால் பதவியைப் பிடித்தவர்களும் ஏராளம். வறுமை எனக்கு இல்லை. ஆனால் அதன் சுகம் அறியமுடியாததே என் வருத்தம். எதை சொல

காதல் காரணங்கள் என்ன?

படம்
pexels.com காதல் என்பது என தத்துவம் என சொல்லி கடிக்கப்போவதில்லை.  அறிவியல் ரீதியில் அதனை பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு காதல் வர தலைமீது லைட் எரியவோ, மணி அடிக்கவோ தேவையில்லை. நம்மிடம் இல்லாத விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஈர்க்கப்படுவோம். அவர் நண்பராகலாம், பின்னாளில் உறவின் தன்மையைப் பொறுத்து வீட்டில் நுழையுமளவு ரைட்ஸ்களை அவர்களுக்கு நீங்களும் நானும் வழங்கலாம். அண்மையில் செய்த ஆய்வுப்படி காதலுக்கு தூண்டுகோலாக அமையும் சூழல்கள் என்ன என்று ஆராய்ந்திருக்கிறார்கள். 500 பேர்களிடம் அறுபது விஷயங்களை கேள்வி கேட்டு ஆராய்ந்திருக்கிறார்கள். இயற்கைக்கு நெருக்கமாக இருப்பது யாராவது 143 சொன்னால், நாய்கள், பூனைகள் மகிழ்ச்சியாக பார்க்கும்போது குழந்தை சிரிக்கும்போது(யாருடைய குழந்தை?) சிரமத்தில் இருக்கும் போது உதவுவது காதல் கிடைக்காதபோது சரி. கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும். இப்படி செய் அப்படி செய் என காந்தி சொன்ன செய் அல்லது செத்துமடி கான்செப்டை காதலி அப்ளை செய்வார். ஏன்? நம் டிசைன் அப்படித்தான். பொறாமை பொங்கும். ஈஏ போகிறீர்கள். பெண்கள் செக்சனில் சூப்பர்