இடுகைகள்

மலையேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

ஸ்விட்சர்லாந்தின் அழகான இடம் - ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

படம்
  ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச் அமைந்துள்ள இடம் – ஸ்விட்சர்லாந்து யுனெஸ்கோ அங்கீகாரம் 2001 டிப்ஸ் மலையேற்றம் செய்ய நினைத்துள்ளவர்கள், அனென்ஹட் எனும் இடத்திற்கு செல்லலாம். இங்கு நல்ல உணவும், மலைகளை பார்க்கும் கோணமும் சிறப்பாக அமைந்துள்ளது.     ஸ்விட்சர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைப்பகுதி. அரசால் பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு 823 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய சிகரங்கள் என இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜங்க்ஃபிராவு மலைச்சிகரம். இதன் உயரம், 4,158 மீட்டர் ஆகும். ஃபின்ஸ்டெரா ஹார்ன் என்ற மலைச்சிகரம் இதை விட உயரமானது இங்கேயே அமைந்துள்ளது. ஆலெட்ஸ் மலைத்தொடர் இருபத்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மலைத்தொடர்களுக்கு வருபவர்கள் சாதாரண சுற்றுலா பயணிகள் அல்ல. பெரும்பாலும் மலையேற்ற வீரர்கள்தான் வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்த மலைப்பகுதி மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. பசுமையான புல்வெளி, பனி சூழ்ந்த மலைகள், மலையில் உள்ள ஏரிகள் என பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. மலையேற்

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

படம்
  எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் ! கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள்.  இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது. தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. து

ஆடை வடிவமைப்பு, மலையேற்றம், சினிமா, தொழில் சாதிக்கும் பெண்கள்! - கிருஷ்ணா பாட்டில், அங்கிதா, ஸ்வேதா, ஹர்சிதா

படம்
                கிருஷ்ணா பாட்டீல் இமாலயத்தில் உள்ள சாடோபந்த மலையில் ஏறிய இளம்வயது பெண் இவர்தான் . மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இமயமலைக்கு சென்ற முதல் பெண் கிருஷ்ணாதான் . 2007 ஆம் ஆண்டு மலையேற்றம் பற்றி உத்தர்காசியிலுள்ள நேரு இன்ஸ்டிடியூட்டில் படித்தார் . பிறகு அதிலேயே அட்வான்ஸ் கோர்சும் முடித்தார் . பதினெட்டு வயதில் படிப்பின் ஒரு பகுதியாக மலையேற்றத்தைத் தொடங்கிவிட்டார் . மூன்று வயதிலிருந்து மலையேற்றம் செய்யவேண்டும் என்று நினைத்து வந்தவர் கிருஷ்ணா . ஏழு கண்டங்களிலுள்ள ஏழு மலைத்தொடர்களில் ஏறிவிட்டார் . அதற்குப் பிறகு 2010 இல்தான் இமயமலையில் ஏறுவதற்கான முயற்சியைத் தொடங்கினார் . மெக்கின்லி மலை ஏறும்போது தொழில்நுட்பரீதியான தடைகள் தோன்றின . ஒருவகையில் பெண்கள் சாதிப்பதற்கான பல்வேறு தடைகளை கிருஷ்ணா பாட்டீல் தனது சாதனைகள் மூலம் ஓரளவு தகர்த்துவிட்டார் . இயற்கைச்சூழலோடு இணைந்து வாழ்வது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் . ஆறு கண்டங்களிலுள்ள மலையேற்ற பெண்களில் இவரும் சுத்தமான நீர் , காடுகள் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . தையல் மற்றும் ஓவியங்களிலும்

அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!

படம்
உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன் ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது. கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம். 48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே. ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே? தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மலையேற்றத்திற்கு நிறைய ப

இந்தியாவில் மலையேற்றம் செல்ல ஹாட்ஸ்பாட்டுகள்!

ட்ரெக்கிங் சவால் ! Stok Kangri 20 ஆயிரம் அடி உயரத்திலுள்ள ஸ்டோக் பகுதி , இமாலயத்தின் தூய அழகை 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தரிசிக்க உதவும் . ஒன்பது நாட்கள் பயணம் செய்ய முயலும் இப்பகுதியில் ஸன்ஸ்கார் மற்றும் இந்தஸ் ஆற்றுப்பகுதி உங்கள் ஆன்மாவை விழித்தெழச் செய்யும் . கட்டணம் 18 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது .  Pin Parvathy இமாலயத்தின் பழமையான மலையேற்ற வழி இது . 17 ஆயிரத்து 450 அடி உயரத்தில் ஜிலுஜிலுவென 20 டிகிரியில் சாகச அனுபவத்தை அனுபவிக்கலாம் . கட்டணம் 24 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது . Bara Bangal   குலு , காங்ரா பள்ளத்தாக்கு பகுதிகளை இணைக்கும் மலையேற்றம் இது . 26 ஆயிரத்து 775 ரூபாயை கந்துவட்டி வாங்கியாவது தேற்றினால் பதினாறாயிரத்து 70 அடியில் ஜூன் - அக் மாதத்தில் ஜாலி செய்யலாம் . புதிதாக மலையேற்றம் செல்பவர்கள் Beasehund, Parashar lake, chopta tunganath ஆகிய பகுதிகளை விசிட் செய்யலாம் . தலைவலி , வயிற்று பொருமல் , வாந்தி என இதற்கான மருந்துகளை முன்கூட்டியே எடுத்துச்செல்வது நல்லது .