அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!




Image result for nirmal purja

உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன்


ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது.

கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம்.

48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே.

ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே?

தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

மலையேற்றத்திற்கு நிறைய புதிய கருவிகள் வந்துள்ளன. அவை வீரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. நான் பெரும்பாலும் கருவிகளை குறைவாகவும் நானே தயாரித்தும்தான் பயன்படுத்துகிறேன். கஞ்சன்ஜங்கா மலையில் ஏறும்போது, மூன்றே மூன்று ஆணிகளை மட்டுமே அடித்து அதைப்பிடித்தபடி மேலே ஏறினேன். பதினான்கு மலைத்தொடர்களில் ஏறியபோதும் என்னிடம் இருந்த பொருட்களின் அளவு மிகவும் குறைவுதான். காரணம், அப்போது ஷாப்பிங் செய்வதற்கு என்னிடம் நேரமில்லை என்பதுதான்.

மலையேற்றத்திற்கான நிதி ஆதாரத்திற்கு என்ன செய்கிறீர்கள்?

என் வீட்டை விற்றுத்தான் செலவு செய்து வருகிறேன். மேலும் என் நண்பர்கள் எனக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள். இங்கிலாந்து ராணுவத்தில் சிறப்பு படையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். இதில் கிடைக்கும் பென்ஷனும் உதவுகிறது.

எப்படி தயாராகிறீர்கள்?

உடற்பயிற்சியை விட மனதிற்கான பயிற்சிகள் முக்கியம். நேபாளத்திற்கு வந்தபிறகு எனக்கு உடற்பயிற்சியை விட நிதி திரட்டுதலே முக்கியமான பணியாக இருந்தது. இங்கிலாந்தின் சிறப்புபடையில் பெற்ற பயிற்சிகள் எனக்கு உதவுகின்றன. அங்கு ஒன்றை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டால், அதனை எப்பாடு பட்டாலும் செய்யவேண்டும். அவ்வளவுதான். இதனால் பெரியளவிலான உடற்பயிற்சிகளை நான் செய்வதில்லை.
நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலுள்ள

மலைப்பகுதிகளில் ஏறுகிறீர்கள். ஏதேனும் பிரச்னைகளைச் சந்தீர்களா?

திபெத்திலுள்ள ஷிஷாபாங்மா எனும் இடத்தை மூடிவிட்டார்கள். அங்கு செல்ல நிறைய கஷ்டப்பட்டேன். ஐந்துக்கும் மேற்பட்ட சீன அமைச்சர்களை சந்தித்துப் பேசினேன். நாம் ஒரு நிறுவனத்தைச் சார்ந்து இருந்தால் இந்த சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்காது. நான் தனியாகவே நிதி திரட்டி, எனது பயணங்களை மேற்கொள்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் மலையில் ஏறுவது மட்டும்தான். இந்த வாழ்க்கை கடினமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துத்தான் இருக்கிறது.

நன்றி – டைம்ஸ் – நவ. 12, 19

சந்திரிமா பானர்ஜி

பிரபலமான இடுகைகள்