மணிக்கட்டில் மறையும் விரல்கள் - டெலஸ்கோப் பிங்கர்ஸ் பாதிப்பு






a radiograph of the woman's hands



உலகில் கணக்கு வழக்கின்ற பல்வேறு வியாதிகள் மனிதர்ளை பாதித்து வருகின்றன. அப்படி ஒரு நோய்தான் டெலஸ்கோப் ஃபிங்கர்ஸ் என்பது. சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் எனும் பிரச்னை மூலம் உலகிலுள்ள 6 சதவீத நபர்களுக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது. இதில் என்ன வினோதம் என்றால், விரல் எலும்புகள் மெல்ல சுருங்கி மறைவதுதான்.

69 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதனை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போதுதான், இக்குறைபாட்டை அவர்களால் அறிய முடிந்தது. 2013ஆம் ஆண்டே ருமாட்டாலஜியா கிளினிகா எனும் ஆய்விதழில் டெலஸ்கோப் பிங்கர்ஸ் பாதிப்பு பற்றி கட்டுரை எழுதப்பட்டுவிட்டது. தொலைநோக்கியை கையில் பிடித்தபடி காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அப்போது உங்கள் விரல் எப்படி மடங்கியிருக்கிறதோ அதே போல இப்பாதிப்பிலும் விரல் எலும்புகள் அவற்றின் நிலைகள் மாற்றம் கொள்கின்றன.


பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு மேற்சொன்ன பெண்மணிக்கு கண்டறியப்பட்டது. துருக்கியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கை மணிக்கட்டிலுள்ள திசுக்கள் அழிவால், அவரது விரல்கள் மெல்ல தோலுக்குள் புதைந்து வந்தன. இதனை தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் நோய்க்கான மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நோயாளியின் வலியை மட்டுப்படுத்துவதோடு, நோய் பாதிப்பையும் குறைக்கலாம்.


நன்றி - லிவ் சயின்ஸ்

பிரபலமான இடுகைகள்