மாமா மாப்பிள்ளை பாச கிளிஷே காவியம் - வெங்கி மாமா!
வெங்கி மாமா - தெலுங்கு
இயக்கம் - கே.எஸ். ரவீந்திரா
கதை - ஜனார்த்தன் மகரிஷி
ஒளிப்பதிவு - பிரசாத் முரல்லா
இசை - தமன் எஸ்எஸ்
ஆஹா...
வெங்கடேஷ்தான் பளபளக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி கண்ணீர் மல்க தான் வளர்த்த மாப்பிள்ளை மீதே புகார் சொல்வதை பார்ப்பது என மனதில் நிற்பது இவர்தான்.
நாக சைதன்யா கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. குடும்பமாக இருக்கும் ஆட்கள். பாசம், மாமா, மாப்பிள்ளை என பேசுவது இதுதான் படத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. மற்றபடி கதையில் உறுதியான எந்த விஷயமும் இல்லை.
தமனின் இசையில் ரெட்ரோ பாடல்கள் ஈர்க்கின்றன.
ஐயய்யோ
கதை, திரைக்கதை எல்லாமும்தான். ராசி கண்னா ட்ராக் பொறுமையை சோதிப்பது போல உள்ளது. படத்தில் ஜாதகம்தான் சிக்கல் என்றால் அதனையே முதன்மையாக வைத்து இருக்கலாம். ஜாதகம் அறிமுகமாவதற்கு முன்னாடியே ராவ் ரமேஷ் வில்லனாக புரமோஷன் வாங்கிவிடுகிறார். அப்புறம் ஜாதகம் என்ன செய்யப்போகிறது?
பயிற்சி பெற்ற வீர ர்களை சாதிக்க முடியாததை, மாப்பிள்ளை மீது பாசம் கொண்ட வெங்கடேஷ் எப்படி சாதிக்கிறார்? இதெல்லாம் கேட்டால் அங்கு பனிமலை முகடுகளில் ... என பேசுவார்கள்.
பாசத்திற்காக பார்க்கலாம். கவனித்து பார்க்காதீர்கள்.
கோமாளிமேடை டீம்