சென்சஸிற்கும், என்பிஆருக்கும் என்ன வேறுபாடு? -2021 டாஸ்க் இதுதான்!






Image result for modi amit shah cartoon






என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றுக்கு அடுத்த வரிசையில் என்பிஆர் செயல்பாட்டைத் தொடக்க நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, மக்கள்தொகையைக் கணக்கிட உதவும். இதில் பெயர் இருப்பதற்கும், குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதில் தகவல்கள் பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தாமலிருக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுவாக அரசு இந்த உறுதியை எப்போதும் தந்த து கிடையாது. இனிமேலும் கிடையாது.

மக்கள் தொகையைக் கணக்கிடும் தகவல், என்ஆர்சியுடன் இணைக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ஆர்சியின் முதல் கட்டப்பணி, இந்தியாவில் உள்ள மக்களைக் கணக்கிடுவதுதான். எனவே, இப்பணியை மாநில அரசு தொடங்க கூடாது என இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதன்வழியாகவும் சிறுபான்மையினரைக் கணக்கிட்டு அவர்களை தனி முகாம்களின் அடைக்கும் வாய்ப்பு உள்ளது.

என்ன வேறுபாடு?

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அரசின் என்பிஆருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதோடு நிலப்பரப்பு சார்ந்த தகவல்களும் இதில் முக்கியமானவை.

என்பிஆர் மூலம் உஜ்வாலா போன்ற திட்ட பயனாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்கிறது அரசு. அதன் மறைமுக நோக்கங்கள் என்ன என்பதை விரைவில் பத்திரிகைகள் எழுதக்கூடும்.

2021இல் சென்சஸ், என்பிஆர் ஆகிய பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும். இதற்கான நிதி 12,695 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.


நன்றி - மின்ட் -சாஸ்வதி தாஸ்