வேகமாக வாசிப்பது என்பது உண்மையா?




like a boss win GIF



தெரிஞ்சுக்கோ!

எனக்குத் தெரிந்த நண்பர் இதழியில் துறையில் பணியாற்றுகிறார். மாதம் அறுபது எழுபது நூல்களை படித்து முடிப்பவர். அவர் எப்படி படிக்கிறார் என்பதை நான் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்படி வாசிப்பது பற்றியும், அவரது அறிவுத்திறன் பற்றியும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் படித்த விஷயங்களை நிறைய முறை அவரது நிறுவனத்தில் அமல்படுத்தி சாதித்திருக்கிறார். எப்படி இப்படி சிலரால் மட்டும்  வேகமாக படிக்க முடிகிறது.

இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நிறைய படிக்கும் முடிவெடுப்பது முக்கியம். அப்போதுதான் படிக்கும் வேகம் கைகூடும். அதற்காக மூளை இயல்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை முழுமையாக படிக்காமலேயே உங்களுக்கு அதுதான் என தெரிந்துவிடும். பின் எதற்கு, அதனைப் படிக்கவேண்டும்?

இதனை சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிலர் இப்படி வேகமாக படிப்பவர்கள் ஒன்றும் விவேகானந்தர் போல கிடையாது என்று வாதிடுகிறார்கள்.


உலகளவில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நிமிடத்திற்கு 200 முதல் 400 வரையிலான வார்த்தைகளை படிக்கிறார்கள். புரிந்துகொள்கிறார்கள்.

அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி நிமிடத்திற்கு 1200 வார்த்தைகளை படிப்பதாக பேட்டியில் சொன்னார்.

வல்லுநர்கள் இதனை நம்பவில்லை. அதிபர் 500-600 வார்த்தைகளை பொருள் உணர்ந்து படிப்பதாக ஆய்வு செயது சான்னார்கள்.

பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எவ்லின் வுட்சின் வேகமாக படிக்கும் கலையைக் கற்க முன்வந்தனர். காலம் 1959 - 1980 . இதில் அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் மற்றும நடிகரான சார்ல்டன் ஹெஸ்டன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

1980ஆம் ஆண்டில் இதற்கான கட்டணம் 390 டாலர்கள்.

நிமிடத்திற்கு தன்னால் 2700 வார்த்தைகளை படிக்க முடியும் என்று சொன்னார் வுட்.

குறிப்பிட இமெயிலைப் பார்த்து புரிந்துகொள்ள கல்லூரி மாணவர்களுக்கு 3.5 முதல் ஏழு நிமிடங்கள் தேவைப்படுகின்றன. அமெரிக்க அதிபர் கென்னடிக்கு 2.5 நிமிடங்கள் மட்டுமே தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள். வேகமாக படிக்க சொல்லித்தரும் வுட்டிற்கு 30 நொடிகள் மட்டுமே தேவை.

நன்றி - க்வார்ட்ஸ்


பிரபலமான இடுகைகள்