நான் மோடியை நம்புகிறேன்! - சுப்ரான்சு சௌத்ரி



Image result for chattisgarh people




சுப்ரான்சு சௌத்ரி

முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர். மத்திய இந்தியாவில் மாவோயிச தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாடுபட்டு, கூகுள் டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருதைப் பெற்றுள்ளார். அண்மையில் வாட்ஸ்அப் கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்களில் இவரும் உள்ளதாக செய்திகள் அடிபட்டன.

இந்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை அழித்துவிடுவார் என நம்புகிறீர்களா?

ஆமாம். ஏன் மோடியால் முடியாது? சத்தீஸ்கர் மாநில முதல்வர் கூட எங்கள் ஆப்பின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. ஆனால் இவர் கவனித்தார். ஊடகங்களில் புல்டூ பற்றிக் கேள்விப்பட்டு பிற மாநிலங்களின் கிராம ப் புறங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் செயல்முறைகளுக்கு இதனை பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி எனக்கு பெரும் ஊக்கம் தந்தவர் என்பதை நான் மறுக்கப்போவதில்லை.

மாவோயிச தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் எப்படி செயல்படுகிறீர்கள்?

நான் சத்தீஸ்கரில் பிறந்து  வளர்ந்தவன். அங்குள்ள நிலம், காடு மீதான உரிமைகளை சுயமாக பெற்றிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் அதனை இழந்துவிட்டதாக மாயை ஏற்படுத்தி  வன்முறை வழிக்கு மாவோயிச தீவிரவாதிகள் இழுக்கின்றனர். அரசியல் அமைப்பு தந்த உரிமைகளை யாரும் பறிக்கவில்லை. இதை மத்திய அரசு கூட உணரவில்லை. அதற்காக மக்களின் குரல்களின் அவர்களின் குறைகளைக் கேட்கவே சிஜிநெட் ஸ்வரா என்ற செல்போன் இணைப்பை உருவாக்கினோம். இதில் பழங்குடி மக்கள் கோண்டி மொழியில் தங்கள் புகார்களை அனுப்பலாம், கூறலாம். இவை உலகில் உள்ளவர்களுக்கு புரியும் மொழியில் மாற்றப்படும். இதனால் அப்பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வுகளைக் காண முடியும்.
கிராம ப்பகுதிகளில் இணையம் செயல்படுவதே கடினம் ஆயிற்றே?
காரணம் இங்குள்ள தீவிரமான சோம்பல், மற்றும் ஊழல்தான். ஆனால் இந்த நெட்வொர்க் வெற்றி  அடைந்த தற்கு மக்களின் கைகளில் போன் வந்து சேர்ந்த தே காரணம். மக்களின் புகார்களை ஆப் வழியாக பெற்று அதனை விசாரித்துவிட்டு வலைத்தளத்தில் பதிவு செய்கிறோம். அரசு இதனை பார்த்தால் மட்டுமே தீர்வு நிச்சயம்.

புல்டு என்ற ஆப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். 

இணையத்தில் அதற்கான டேட்டா இல்லாமல் கூட ப்ளூடூத் மூலம் புல்டு ஆப்பை இயக்கலாம். காரணம், சத்தீஸ்கர் அமைந்துள்ள இடம் பிற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டது. இம்முறையில் தினசரி பதினைந்து போன்கால்கள் வருகின்றன.
உங்கள் வாட்ஸ் அப் கணக்கை யார் உளவு பார்த்திருக்க முடியும்?
சர்வ அதிகாரங்கள் கொண்ட அரசைத் தவிர அதனை யாரும் செய்திருக்க முடியாது. மாவோயிச தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் பணிபுரிவதால், அவர்களுக்கு இந்த கண்காணிப்பு தேவைப்பட்டிருக்கலாம். மற்றபடி இதில் என்னை மறைத்துக்கொள்ள ஏதுமில்லை.

நான் செய்யும் செயல்களை வெளிப்படையாகவே செய்து வருகிறேன். எனக்கு இதுபற்றி எந்த பயமும் கிடையாது. நான் பஸ்தரில் அமைதிக்காகவே பாடுபட்டு வருகிறேன். பாதுகாப்பு பற்றிய கோர்ஸ் ஒன்றை அண்மையில் படித்தேன். இன்றுவரை வாட்ஸ்அப்பை நான் பயன்படுத்தி வருகிறேன். இதில் அனுப்பும் செய்திகளைப் பொறுத்தவரை அஞ்சல் அட்டை போலத்தான். யாரும் எளிதில் படிக்கலாம். நான் தொண்ணூறுகளில் பிபிசி செய்தியாளராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி உள்ளேன். இதற்காகவே தொடர்ந்து என்னை அரசு கண்காணித்து வரக்கூடும். எனது தகவல்கள் மால்வேர் மூலமாக திருடப்பட்டு உள்ளதாக டொரண்டோ பல்கலையிலின் சிட்டிசன் லேபிலிருந்து அழைத்து சொன்னார்கள். அதுபற்றி நான் கவனமாகவே இருக்கிறேன். 

நன்றி – டைம்ஸ் நவ.6, 2019 –ருச்சிதா உனியால்