சிறந்த ஸ்மார்ட் போன்கள் 2019





In a lot of ways the iPhone 11 Pro is the phone to beat



2019 சிறந்த ஸ்மார்ட் போன்கள்

ஆப்பிள் 11 புரோ

சிறப்பான கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் ஜி.வி. வெங்கட்ராம் போல புகைப்படம் எடுக்கும் தரத்தில் ஆப்பிளை அடித்துக்கொள்ள ஆளில்லை இத்துறையில் . ஏ13 பயோனிக் சிபியூ பிரமாதமாக இருக்கிறது. எந்த டாஸ்க்கிலும் சுணங்காத சிறந்த போன் இதுவே.





சாம்சங் கேலக்ஸி 10

ஆப்பிளுக்கு போட்டி கொடுக்கும் அளவு தரம், விலை அனைத்தும் கொண்டது. சிறப்பான ஸ்க்ரீன் என்று சொன்னால் சாம்சங் முதலாளியே அடிக்க ஓடிவருவார். அதை வைத்துத்தானே மார்க்கெட்டையே பிடித்தார்கள். சிம்பிளான போன், நிறைய வசதிகள், எடை குறைவு என எதிர்பார்ப்பிற்கு மேலே சொல்லு என வசீகரிக்கிறது சாம்சங்.


கூகுள் பிக்சல் 4

வெகு நாட்களாக மார்க்கெட்டில் முன்னுக்கு வரத் துடித்து  சாதித்துவிட்டது கூகுள். பிக்சல் 4, 90 ஹெர்ட்ஸ் திரை, வேகமான முகமறிதல் திறக்கும் வசதி, ஸ்பேம் விளம்பரங்களை ஒதுக்கும் வசதி என நவீன இளைஞர்களுக்கான வசதியில் முன்னாடி செல்கிறது. இரவு வானத்தைக்கூட இந்த போன் மூலம் அழகாக படம் எடுக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கேமராவின் ஜூம் செய்யும் வசதிகளும் பிரமிக்க வைக்கின்றன. கொடுக்கும் காசுக்கு சிறப்பான வசதிகளில் சூப்பர் சொல்ல வைக்கின்றன.

ஹூவெய் பி30 புரோ

ஹூவெய் பல்வேறு இக்கட்டுகளை சந்தித்து வருகிறது. தடை அமலுக்கு வரும் முன்பே மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த போன். எனவே கூகுள் சமாச்சாரங்கள் சிறப்பாக இயங்குகின்றன. ஹூவெய் தனக்கென தனி ஓஎஸ் தயாரித்துள்ளதால், அவை அடுத்த அப்டேட்டில் உள்ளே வரலாம். ஆப்ஸ்களும் மாறும் வாய்ப்பு உள்ளன. காசுக்கான மதிப்பில் சிறப்பாகவே செயல்படுகிறது ஹூவெய்.


சோனி எக்ஸ்பீரியா 5


சோனி கண்ணும் கருத்துமாக எக்ஸ்பீரியாவை உருவாக்கியுள்ளது. இன்னும் கொஞ்சம் கருத்தாக மென்பொருட்களையும், வன்பொருட்களையும் கூர்மை படுத்தினால் அனைத்து சீன நிறுவனங்களுக்கும் செம போட்டி கொடுக்கும் எக்ஸ்பீரியா. தரத்தை நம்புபவர்கள் நிச்சயம் இந்த போனை வாங்குவார்கள். ஸ்மார்ட்போனுக்கான அத்தனை அம்சங்களிலும் கீழிறங்காமல் தன் கொடியை நிலைநாட்டுகிறது சோனி.

நன்றி - நியூ அட்லஸ்