இடுகைகள்

இடைவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!

படம்
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...

க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி

படம்
  மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி! பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள்  இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள்  நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள்  அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக  புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.  1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை....