இடுகைகள்

செயல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?

படம்
  ஆல்பெர்ட் பண்டுரா ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.  ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்.  ஆல்பெர்ட்

குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆராய்ச்சியை செய்த ஜீன் பியாஜெட்

படம்
  ஸ்விட்சர்லாந்தின் நியூசாடல் என்ற நகரில் பிறந்தார். இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். தனது பதினொன்று வயதில் தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கை எழுத தொடங்கிய மேதாவி. மனித குணங்கள், இயற்கை அறிவியல் பற்றிய பாடங்களை எடுத்து படித்தார். இருபத்தி இரண்டு வயதில் நியூசாடல் பல்கலையில் முனைவர் பட்டம் வென்றார். உளவியலில் ஆர்வம் வந்தது பிற்காலங்களில்தான். பிரான்சில் உளவியல் ஆய்வுகள் பற்றி படித்தார். 1921ஆம் ஆண்டு ஜீன் ஜாக்குயிஸ் ரூஸ்யூ என்ற ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்பில் சேர்ந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வைத்து குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தார். 1955ஆம் ஆண்டு, மனித அறிவு, குணங்கள் பற்றிய மையத்தை தொடங்கினார். இறக்கும் காலம் வரை அதன் தலைவராக இயங்கினார். உலகம் முழுக்க உள்ள கல்வி அமைப்புகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.  முக்கிய படைப்புகள் 1932 தி மாரல் ஜட்ஜ்மென்ட் ஆஃப் தி சைல்ட்  1951 தி சைக்காலஜி ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் 1952 தி ஒரிஜின்ஸ் ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் இன் சில்ட்ரன் 1962 தி சைக்காலஜி ஆஃப் தி சைல்ட் 

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலா

மனிதர்களால் உருவாக்கப்படுவதே உண்மையான நெருக்கடி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் உண்மையான நெருக்கடி ஜே கிருஷ்ணமூர்த்தி காப்புரிமை (ஆங்கில மூலம்) – கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா வரலாறு முழுவதும் பார்த்தால், அதில் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகள் நம்மை ஆச்சரியத்திலும் அதேசமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி அமைந்துள்ளது. பல்வேறு வல்லுநர்கள் கூறிய கணிப்புகள், அறிவுஜீவிகளின் கருத்துகள் என அனைத்தையும் கடந்து   உருவாகும் பல்வேறு மோசமான சூழல்கள் மனிதர்களை ஆதரவில்லாத நிலையில் தள்ளியிருக்கின்றன. நெருக்கடியான நிலை, பொய் ஆகியவற்றுக்கு இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. நாம், இந்த வாழ்க்கையை வாழவே பெருமளவு ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்கிறோம். ஆனால், வாழ்க்கை பற்றிய உண்மையான தேடல், மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் பற்றி யோசிப்பதில்லை. இப்படி வாழும் வாழ்க்கையால் உலகில் பெரும் நெருக்கடி நேருமா இல்லையா என்பது பற்றி நாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. உண்மையில் அப்படி கேள்வி கேட்டால் கூட அந்த சூழ்நிலையை நேரடியாக எதிர்கொள்ள பயப்படுகிறோம். அடுத்து நீங்கள் வாசிக்கப்போவது ஜே கிருஷ்ணமூர்த்தி 1934-1985 வரையிலான காலகட்டத்தில் பேசிய உரை, எழ