மனிதர்களால் உருவாக்கப்படுவதே உண்மையான நெருக்கடி - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் |
உண்மையான நெருக்கடி
ஜே கிருஷ்ணமூர்த்தி
காப்புரிமை (ஆங்கில மூலம்) – கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன்
இந்தியா
வரலாறு முழுவதும் பார்த்தால், அதில் மனிதர்கள் உருவாக்கிய
பேரழிவுகள் நம்மை ஆச்சரியத்திலும் அதேசமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி அமைந்துள்ளது.
பல்வேறு வல்லுநர்கள் கூறிய கணிப்புகள், அறிவுஜீவிகளின் கருத்துகள் என அனைத்தையும் கடந்து உருவாகும் பல்வேறு மோசமான சூழல்கள் மனிதர்களை ஆதரவில்லாத
நிலையில் தள்ளியிருக்கின்றன.
நெருக்கடியான நிலை, பொய் ஆகியவற்றுக்கு இடையே வாழ்க்கை
அமைந்துள்ளது. நாம், இந்த வாழ்க்கையை வாழவே பெருமளவு ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்கிறோம்.
ஆனால், வாழ்க்கை பற்றிய உண்மையான தேடல், மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் பற்றி
யோசிப்பதில்லை. இப்படி வாழும் வாழ்க்கையால் உலகில் பெரும் நெருக்கடி நேருமா இல்லையா
என்பது பற்றி நாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. உண்மையில் அப்படி கேள்வி கேட்டால்
கூட அந்த சூழ்நிலையை நேரடியாக எதிர்கொள்ள பயப்படுகிறோம்.
அடுத்து நீங்கள் வாசிக்கப்போவது ஜே கிருஷ்ணமூர்த்தி
1934-1985 வரையிலான காலகட்டத்தில் பேசிய உரை, எழுத்துகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட
கருத்துகள் ஆகும்.
1
அசாதாரண இயற்கை சார்ந்து நிகழ்கால உலகம் நிறைய நெருக்கடிகளை
எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் இவ்வகையில் சில பேரழிவுகள் நடந்துள்ளன. தற்போது
நடைபெற்றுள்ள நெருக்கடி, மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெற்றது போன்ற பேரழிவுத் தன்மை
கொண்டது அல்ல. இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் மோசமான அழிவுச்சூழல் நிலவுகிறது. இந்த
சூழல் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் மட்டும் நிலவவில்லை. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும்
இதே நிலைதான் இருக்கிறது. உடல், மனம், அறம், ஆன்மிகம், சமூகம், பொருளாதாரம் சார்ந்தும்
சிக்கலும், குழப்பமும் உருவாகி வருகிறது.
நமக்குள் உள்ள
சின்னஞ்சிறு விவகாரங்களுக்காக நாம் சரிவையும், வீழ்ச்சியையும் சந்தித்து விளிம்பில்
நிற்கிறோம். உலகத்தில் நடந்துள்ள நெருக்கடி நிலை காரணமாக, சூழல் பரவலான நிலையில் தொந்தரவு
ஏற்படுத்தும் வகையில் உள்ளதை மிகச்சிலர் மட்டுமே புரிந்துகொண்டுள்ளனர். சிலர் சரிவின்
விளிம்பிலுள்ள வாழ்க்கையை மாற்ற முயன்று குழம்பி, இன்னும் மோசமான குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
Madras
22 october 1947
The collected works vol.iv
கருத்துகள்
கருத்துரையிடுக