49 பெண்களை கொலை செய்ததற்காக மன்னிப்புக் கடிதம்

 











ரிட்ஜ்வே, கேரி லியோன்

அமெரிக்காவில், 1982-2001 ஆகிய ஆண்டுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் என 49 பேர் கடத்தப்பட்டு பின்னர், கொல்லப்பட்டனர். வாஷிங்டனைச் சேர்ந்த காவல்துறை, கொலையாளியைத் தேடிக்கொண்டிருந்தது. கொலையாளிக்கு க்ரீன் ரிவர் கில்லர் என பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது. பச்சை ஆற்றின் கரையில்தான் கொன்றவர்களை கொலையாளி புதைத்து வைத்தார். கரை நெடுக பிணங்களாக காவல்துறை தோண்டியெடுத்தனர். அப்போதும் கூட நிறைய பிணங்களின் அடையாளம் தெரியவில்லை.  

1982ஆம் ஆண்டு சியாட்டிலில் லியான் வில்காக்ஸ் என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் டகோமா எனும் பகுதியைச் சேர்ந்த பெண்மணி. இதற்கடுத்தும் ஒரு கொலை நடைபெற்றது. ஆனால், இரு கொலைகளுக்கு இடையிலான ஒற்றுமை பெரிதாக ஏதுமில்லை. இதனால் காவல்துறை அதை பச்சை ஆற்றுக் கொலைக் கணக்கில் சேர்க்கவில்லை. 1982ஆம் ஆண்டு  ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெண்டி, ஜிசல், டெபோரா, மார்சியா, சிந்தியா ஆகிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு பச்சை ஆற்றின் அருகே கொல்லப்பட்டு கிடந்தனர்.

கொலை அடுத்தடுத்து நடைபெற, காவல்துறைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகள்,  கொலையாளி யாராக இருக்கும், எப்படி இருப்பார்  என ஏசி ரூமில் அமர்ந்து நிதானமாக யோசித்துக்கொண்டிருந்தபோது,  பெண்கள் நான்கு பேர் கடத்தப்பட்டு கொலையானார்கள். உள்நாட்டு காவல்துறையின் ஜான் எட்வர்ட் டக்ளஸ் என்ற குற்றத்துறை ஆய்வாளர், பச்சை ஆற்று கொலையாளி பற்றிய யூகங்களை வைத்து புரோஃபைல் ஒன்றைத் தயாரித்தார். அது கச்சிதமாகப் பொருந்திப்போனதுதான் ஆச்சரியம்.

 கொலையாளி வெள்ளையர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மது அருந்துபவர். ஒரே வேலையில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர். புகைபிடிக்காதவர். அவருடைய ஒரே  வெளிப்புற வேலை, பெண்களை வேட்டையாடி கொல்வதுதான்  என்பதை டக்ளஸ் துல்லியமாக அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். ஆனாலும் குற்றவாளியை காவல்துறையால் பிடிக்கமுடியவில்லை. இந்த கொலை வழக்கு காரணமாக டக்ளஸ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். குற்றவாளி பற்றி அடையாளம் கண்டாலும் கூட பிடிக்கமுடியவில்லை என்பது கையாலாகாத்தனம்தானே?

சற்றும் மனம் தளராமல் அனைத்து கொலைகளும் குறிப்பிட்ட சடங்குகள் போல நடந்திருந்ததை காவல்துறை கண்டுபிடித்தது.  கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கி எறிய ஏழு இடங்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டன. கொலையான பெண்களின் யோனியில் பிரமிடு போன்ற கற்கள் திணிக்கப்பட்டிருந்தன. ஒரு பிணத்தின் கால் தசையில் மட்டும் மீன் திணிக்கப்பட்டிருந்தது.

1983ஆம் ஆண்டு விலைமாதான கெயில் என்ற பெண்மணி பிக் அப் ட்ரக்கில் சென்றதை சில  சாட்சிகள் சொன்னார்கள். ஆனால், விலைமாதின் ஆண் தோழர், தோழி சென்ற வண்டி பற்றி மாறுபட்ட தகவல்களை சொன்னார். விலைமாது, கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, விலைமாதான மேரி மால்வர் என்ற பெண் இறந்துபோனார். இவரின் ஏஜெண்ட் சொன்ன  தகவல்படி காவல் துறையினர் கேரி ரிட்ஜ்வே என்பவரை விசாரித்தனர். ஆனால் அவரைப் பார்த்து சில முன்முடிவுகளை எடுத்து விசாரித்ததில் அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தாமல் விட்டுவிட்டனர். அவரும் தான் குற்றம் செய்யவில்லை என பேசியே போலீசாரை ஏமாற்றிவிட்டார்.

1983ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என மாதம்தோறும் கொலைகளை மாதம் இருமுறை என குங்குமம் தோழி விற்கிறார்களே அந்த வேகத்தில் செய்து வந்தார் கேரி. 1984ஆம் ஆண்டு கொலைகளைத் தடுக்கும் சிறப்பு படை உருவாக்கியும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. 1982ஆம் ஆண்டு காவல்துறை கேரியை  பிடித்து சந்தேகப்பட்டு விசாரித்தது. பாலிகிராப் சோதனை கூட செய்து பார்த்தது. ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. கேரி குற்றம் செய்யவில்லை என விடுவித்துவிட்டது.

1984ஆம் ஆண்டு, கொலையாளி கேரியிடம் மாட்டி உயிர்தப்பிய ரெபெக்கா என்ற பெண்ணை விசாரித்தது. அந்த பெண் சந்தேகப்படும் பட்டியலில் இருந்து கேரியை சரியாக அடையாளம் காட்டினாள். கார் டேட் என ரெபெக்காவை அழைத்து சென்று மறைவான இடத்தில் கழுத்தை நெரித்து கொன்றுபோட  கேரி முயன்றார் என அந்தப் பெண் கூறினாள்.  ஆனால் ரெபெக்கா தப்பித்துவிட்டார். அவர் காவல்துறையில் சொன்ன கதை  என்னவென்றால், ‘’செக்சுக்காக அந்த பெண்ணை கூட்டிச்சென்றேன். ஆனால், உடலுறவின் போது கடித்துவிட்டாள். அதனால் அவளது கழுத்தை நெரித்தேன்’’ என்றார். காவல்துறையும் பயங்கர பள்ளத்தாக்கு கதைகளை கேட்க விரும்பாமல் போதும்பா போதும் என நிறுத்தச் சொல்லிவிட்டனர்.

1949ஆம் ஆண்டு சால்ட் லேக் சிட்டியில் பிறந்தவர். 1960ஆம் ஆண்டில் வாஷிங்டனுக்கு இடம்பெயர்ந்தது அவரது குடும்பம். 1963ஆம் ஆண்டு சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். சிறுவன்,’’ எதற்கான என்னை கொல்ல நினைக்கிறாய்?’’ என்று கேட்டான். அதற்கு கேரி சொன்ன பதில்தான் அவன் கொலை செய்து வருவதற்கான காரணம்.’’ கொலை செய்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினேன்’’ என்று சொல்லியபடியே சிறுவனின் வயிற்றில் குத்திய கத்தியை உருவி, அவனின் சட்டையில் துடைத்திருக்கிறார். பிறகு வானை பார்த்து நடந்தபடியே சத்தமாக சிரித்துக்கொண்டே சென்றிருக்கிறார்.

பள்ளியில் படித்த தோழியை காதலித்து மணந்தார். பிறகு அவரை வேசி என்று சொல்லி விவாகரத்து செய்தார். அடுத்து மணந்த மனைவியின் மூலம் ஒரு மகன் பிறந்தார். அதற்குப் பிறகு கேரியின் வாழ்க்கை மாறியது. ஒரே நாளில் இரண்டு தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு சென்று வரும் அளவுக்கு பக்திமானாக மாறினார். வீட்டில் இருக்கும்போது பைபிளை கையில் எடுத்து வைத்து படிப்பதே வேலை. பிறகு இரண்டாவது மனைவியும் கேரியும் பேசி வைத்து விவாகரத்து செய்தனர்.

 32 ஆண்டுகள் பெயின்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். நிறுவனத்திற்கு சரியான நேரத்திற்கு வரும் பணியாளர்  என விருதே வாங்கினார். அதேசமயம் பாலியல் ரீதியாக உடலுறவு கொள்வதில் அதீத ஆர்வம் உருவானது. பெண் தோழிகள், விலைமாதுக்களை அழைத்து வந்து ஓரிரவில் மூன்று அல்லது நான்கு முறை முழுவேகத்தில் பாய்ச்சலை நடத்திக் காட்டியிருக்கிறார். அதிலும் பாண்டேஜ், மலப்புழை புணர்ச்சி என வெரைட்டிகள் வேறு. இதை மூன்றாவது மனைவி சிலாகித்துஅந்த விஷயதில்  அவர் ஒரு மாதிரிங்க என்று பேசியிருக்கிறார்.

கேரியை டிஎன்ஏ சோதனை மூலம்தான் குற்றங்களை ஒப்புக்கொள்ள வைத்தனர். அவரது வீட்டில் பல்வேறு சோதனைகளைச் செய்தும் கூட எளிதாக ஆதாரங்களை கண்டறிய முடியவில்லை. வல்லுறவு செய்தவர்களின் உடலில் பெறப்பட்ட விந்து, முடி ஆகியவற்றைக் கண்டறிந்து அதன் மூலமே  கேரியை வழக்கில் ஆழமாக சிக்க வைத்தனர். கேரி இருபத்தைந்து கொலைகளை ஏற்றார். காவல்துறையினர் 49 கொலைகளை அவர் தலை மீது கட்டினர். முதலில் தான் அப்பாவி என்று கூறியவர், பின்னாளில் கொலையானவர்கள் எங்கு புதைக்கப்பட்டனர் என அவரே அடையாளம் காட்டினர். பிணை இல்லாத சிறை தண்டனை கேரிக்கு வழங்கப்பட்டது. இறுதியாக 49 கொலைகளில் 42 கொலைகளை செய்ததாக ஏற்றார்.  

அவர் எழுதிய கடிதம் ஒன்றைப் பார்ப்போம்.

இளம்பெண்களைக் கொலை செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் முடிந்தளவு நினைவில் உள்ள தகவல்களை காவல்துறைக்கு கொடுத்து உடல்களை மீட்க உதவிஉள்ளேன்.  மக்களை பயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காவல்துறை, வழக்குரைஞர், என்னுடைய வழக்குரைஞர் ஆகியோர் பொறுமையாக இருந்து வழக்கு விசாரணையில் உதவினார்கள். நடந்த கொலைகளை பற்றிய விவரங்களை  நான் நினைவுபடுத்திச் சொல்ல அவர்கள் அதை பொறுமையாக கேட்டனர். நான் செய்த செயல்கள் மோசமானவை என்று தெரியும். நீண்ட காலத்திற்கு முன்பே இந்த எண்ணங்களிலிருந்து வெளியே வர முயன்றேன். பெண்களை கொலை செய்வதை தவிர்க்க  முயற்சி செய்தேன். இந்த நரகத்தில் எனது மனைவி, மகன், சகோதரன், உறவினர்களை  உள்ளே கொண்டுவந்துவிட்டேன். அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கண்டறியப்படாத பெண்களின் உடல்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களுக்கு இன்னும் சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும். அவர்களைக் கொன்றதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீராத வலியை பெண்களின் குடும்பத்திற்கு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

என்னதான் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டாலும், இந்த வலியிலிருந்து மீள பெண்களின் குடும்பத்தார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் வழியில் நாவல் எழுதித்தான் வலியில் இருந்து மீள வேண்டும். வேறு மார்க்கமில்லை.

 

 படம் - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்