இடுகைகள்

நோபல் பரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாங்காங்கின் சுதந்திர பேச்சுரிமைக்கு போராடிய ஜிம்மி லாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?

படம்
  ஜிம்மி லாய், நிறுவனர், ஆப்பிள் டெய்லி நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ், ஹாங்காங் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி லாய்க்கு வழங்கலாம்! நான் ஒரு பத்திரிகையாளர். எனவே, இதை சொல்வது பாகுபாடாக தோன்றலாம். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஹாங்காங்கைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு வழங்கப்படலாம் என நினைக்கிறேன். ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய். கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடும் மனிதர். பொதுவாக தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துப்போய்விடுவார்கள். அவர்களை மீறி உண்மையை பேசுவதால் இழப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்கும். ஜிம்மி லாய் தனது சொத்துக்களைக் கூட இழந்து சிறைக்குச் செல்ல துணிந்துவிட்டாரர். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தபோது ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்ற அடிப்படையில் அன்றைய அதிபர் டெங் ஜியாவோபிங் அதை ஏற்றார். அதன்படி ஐம்பது ஆண்டுகள் ஹாங்காங் செயல்படுவது ஒப்பந்த விதிமுறை. அந்த வகையில் அதன் குடியுரிமைகள், சுதந்திரமான அமைப்புகள் செயல்படும். உண்மையில் டெங் கொடுத்த வாக்குறுதி, அதாவது உறுதி

கிளை ஆக்சிலேட் சுழற்சியைக் கண்டறிந்தவர்! ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ்

படம்
 ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ் ( Hans adolf krebs  1900 - 1981) 1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, ஜெர்மனியின் ஹில்டேஷெய்ம் என்ற நகரில் பிறந்தார்.  இவரது தந்தை, கண், காது, மூக்கு அறுவை சிகிச்சை வல்லுநர். ஹான்ஸ், தனது 25ஆவது வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார்.  1932ஆம் ஆண்டு ஃபிரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, பாலூட்டிகளின் உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வழியாக யூரியா எப்படி உருவாகிறது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சி ஹான்ஸிற்கு, புகழைப் பெற்றுத்தந்தது.   யூதரான ஹான்ஸ், 1933ஆம் ஆண்டு ஜெர்மனியை விட்டு வெளியேறினார்.  இங்கிலாந்திற்கு சென்றவர், 1935ஆம் ஆண்டில், அங்குள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் அங்கு உருவாக்கப்பட்ட உயிரிவேதியியல் துறைக்கு பொறுப்பாளரானார்.  அங்கு செய்த ஆராய்ச்சியில்,உடலிலுள்ள செல்களில் ஆற்றல் பரிமாற்றம் நடப்பதை விவரிக்கும் சிட்ரிக் அமில சுழற்சியைக் (Citric Acid Cycle) கண்டறிந்தார். ஆய்வுப்பணிகளில் பெற்ற புகழ் காரணமாக, ஹான்ஸ் 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராயல் சொசைட்ட

நரம்பியல் துறையில் செய்த ஆய்வுக்காக நோபல் பரிசு வென்றவர்! - சான்டியாகோ ராமோன் ஒய் கஜல்

படம்
  சான்டியாகோ ராமோன் ஒய் கஜல் ( Santiago Ramón y Cajal 1852-1934) ஸ்பெயின் நாட்டின் பெட்டிலா டி அரகான் என்ற நகரில் பிறந்தார். மருத்துவர் ஆகும் லட்சியத்தை தனது தந்தையிடமிருந்து சான்டியாகோ பெற்றார். 1873இல் மருத்துவராகி, க்யூபாவில் ராணுவ மருத்துவராகப் பணியாற்றினார். ராணுவப்பணியை நிறைவு செய்தவர், ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பி முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, 1877.  ஸரகோஸா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பணியாற்றியவர், பிறகு வேலன்சியா பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியரானார். 1887ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்குச் சென்றார். 1892ஆம் ஆண்டு மேட்ரிட் பல்கலைக்கழகத்தில் தசை, நோய் அறிகுறி துறையில் பணியாற்றினார். இங்குதான் நரம்பியல் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். 1906ஆம் ஆண்டு நரம்பியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக கோல்ஜி மற்றும் சான்டியாகோ ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு சான்டியாகோ, ரீகலெக்ஷன்ஸ் ஆஃப் மை லைஃப் (Recollections of My Life) என்ற தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.  https://www.nobelprize.org/prizes/medicine/1906/cajal/article/

உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்! - ஸ்டான்லி என் கோஹென்

படம்
  ஸ்டான்லி என் கோஹென் (Stanley N cohen 1935) அமெரிக்காவின் நியூஜெர்சியில் யூதப்பெற்றோருக்கு(பெர்னார்ட், இடா) பிறந்தேன்.  எலக்ட்ரீசியனான பெற்றோருக்கு பல்வேறு வேலைகளில் உதவி வந்தேன். பிறகு, பென்சில்வேனியாவில்  மருத்துவம் படித்தேன். பாக்டீரியாவின் டிஎன்ஏ வளையமான பிளாஸ்மிட்ஸ் (Plasmids) பற்றி ஆய்வு செய்தேன்.  பாஞ்சோ, உகுலேலே இசைக்கருவிகளை  இசைப்பது பிடித்தமானது. 1964-65 காலகட்டத்தில், ஜெர்ரி ஹர்விட்ஸ் ஆய்வகத்தில் பணியாற்றியபோது பாக்டீரிய மரபணுக்கள் மீது ஆர்வம் பிறந்தது. 1972ஆம் ஆண்டு ஹெர்பர்ட் போயர் என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்து ஒன்றாக ஆய்வு செய்யத் தொடங்கினர். 1973ஆம் ஆண்டு,  மறுசீரமைப்பு டிஎன்ஏ நுட்பத்தைக் கண்டறிந்து வெளியிட்டனர்.   1988ஆம் ஆண்டு கோஹெனுக்கு அமெரிக்க தேசிய  அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு போயருக்கு இப்பரிசு, வழங்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பத்துறைக்கு அடித்தளமிட்டவர்களில் ஸ்டான்லி என் கோஹேனுக்கு முக்கியப் பங்குண்டு.  https://www.whatisbiotechnology.org/index.php/people/summary/Cohen 

நோபல் பரிசு பிட்ஸ்!

படம்
1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல், அறிவியல் துறைகளுக்கான நோபல் பரிசை உருவாக்கினார். பின்னர், 1968 ஆம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கான தனி பரிசை உருவாக்கியது. 1901-2018 காலகட்டத்தில் மட்டும் பல்வேறு அறிவியல் துறைகளுக்கு 590 முறைகள் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் பரிசு அதிகபட்சமாக மூன்று நபர்களை உள்ளடக்கியது. பரிசுத்தொகை இவர்களுக்கு சம பங்காக பிரித்தளிக்கப்படும். தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளடங்கலாக 935 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் துறைகள் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் 52 முறை, பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு சான்றிதழை ஸ்வீடன், நார்வே ஓவியக்கலைஞர்கள் மற்றும் கலியோகிராபி கலைஞர்கள் உருவாக்குகின்றனர். சிறையில் இருப்பவர்களுக்கும் கூட நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி (மியான்மர்),   பத்திரிகையாளர் கார்ல் வான்  ஒசிட்ஸ்கி (ஜெர்மனி), மனித உரிமை செயற்பாட்டாளர் லியு ஜியாபோ(சீனா) ஆகியோர் இம்முறையில் நோபல் பரிசு பெற்றனர்.