இடுகைகள்

பூங்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....

படம்
  வண்ணத்துப்பூச்சி நடை!  வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும்.  காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.  வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.  ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.  பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த  நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்றன. மேற்சொன்ன பொருட்களின் வாசனை மற

வானியல் துறையில் ஓர் அறிவாளி - ஹாக்கிங் பற்றி அறிமுகம்!

படம்
வாசிப்பறை! என்சைக்ளோபீடியா ஆஃப் டைனோசர்ஸ்! தி தெரபாட்ஸ் பதிப்பு- நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஜூராசிக் பார்க் படத்தை  மகிழ்ச்சியாக பார்த்திருப்பீர்கள். அது தொடங்கி டைனோசர்களை கோபமாக, மகிழ்ச்சியாக பார்த்திருக்கிறோம். பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாலும் டைனோசர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பயமோ, அருவெறுப்போ எதுவாகினும் அந்த பேருயிர்கள் எப்படி வாழ்ந்தன, வளர்ந்தன, அழிந்தன என்பது பற்றி சுவாரசியக் கட்டுரைகள் இவை. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூலில் பல்வேறு டைனோசர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில பக்கங்கள் படித்தாலே இந்த நூல் கல்வி நிறுவனங்களுக்காக எழுதப்பட்டுள்ளது தெரிந்துவிடும். ஆனாலும் பிரச்னையில்லை. படிக்கலாம். மகிழலாம். 50 திங்க்ஸ் டு சீ இன் தி ஸ்கை சாரா பார்க்கர் பவில்லியன் வானில் தொலைநோக்கி மூலமாக பார்க்கவேண்டிய ஐம்பது விஷயங்களைப் பற்றி வான் இயற்பியலாளர் சாரா பார்க்கர் கூறுகிறார். விண்வெளி பற்றிய பைபிள் என்று கூட இந்த நூலைக் கூறலாம். ஹாக்கிங் - தி மேன், ஜீனியஸ் தியரி ஆஃப் எவ்ரிதிங் ஜோயல் லெவி ஹாக்கிங்கின் இறப்பிலிருந்து தொடங்குகிற நூல், ஆ

சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா

படம்
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா? செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை  அமைக்கவிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம்  250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது. சைக்கிள் நேச நாடுகள் உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு. திட்டம் வெல்லுமா? தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கா