இடுகைகள்

முத்தாரம்- குழந்தைகள் சினிமா தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"அனிமேஷன் உலகின் கடவுள்"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை  - லிஜி தி ரெட் பலூன் எந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தையாவது திரும்பப் பெற்றுத்தருகிற சில படங்களில் முக்கியமானது ‘ தி ரெட் பலூன் ’. பாரிஸ் நகரில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு . அங்கே வசித்து வரும் சிறுவனுக்கு சிகப்பு பலூன் ஒன்று கிடைக்கிறது . நாளடைவில் பலூனும் அவனும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள் . பள்ளி , வீடு , கடைவீதி என்று சிறுவன் செல்லும் எல்லா இடங்களுக்கும் பலூனும் உடன் வருகிறது . இதைப் பார்க்கும் மற்ற சிறுவர்கள் அவன் மீது பொறாமையாகி , பலூனை அபகரித்துக் குரூரமாக காலால் மிதித்து உடைத்து விடுகின்றனர் . தன்னுடைய நண்பனை இழந்த சிறுவன் கதறி அழுகிறான் . அவனின் அழுகையைக் கேட்டு   நூற்றுக்கணக்கான வண்ணமயமான பலூன்கள் கூட்டாகக் கிளம்பி அவன் இருக்கும் இடத்தை நோக்கி வானில் பறந்து வருகிறது . அந்தப் பலூன்கள் வானத்தை நோக்கி அவனைத் தூக்கிச் செல்வதோடு படம் நிறைவடைகிறது . கேன்ஸ் , ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ் .   ஹயோ மியாசகி இவ்வுலகிலி