பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய சுவையான சம்பவங்களைக் கொண்ட நூல்!
பேச வைத்த பெரியார் செந்தலை ந.கவுதமன் பெரியார் திராவிடர் தமிழர் பேரவை கட்டுரை நூல் ரூ.250 இந்த நூல் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலை எழுதியவரான கவுதமன், திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு கவுதமன் என்று பெயர் வைத்ததே பெரியார்தான். பின்னாளில் தமிழில் புலவர் படிப்பு படித்தாலும் கூட அவர், திராவிடக் கொள்கைக்காக உழைத்திருக்ககிறார். உழைத்தும் வருகிறார். நூலின் இறுதியில் சைக்கிள் மட்டுமே அவருடன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி. நூலில் இருந்து நாம் பெறுவது என்ன என்றால், பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் நூல் முழுக்க உள்ளன. இதில் ஈர்ப்பது பார்ப்பனரான பாரதியின் தாசன் என்று கூறிக்கொண்ட கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசனாக மாறி, அவரது குரு பேசவிரும்பாத, தயங்கிய கைம்பெண் மறுமணம், சாதி, இந்தி திணிப்பு பற்றியெல்லாம் பேசினார் என்பதுதான். பாரதிதாசன் வாழ்க்கையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக அவர் பட்ட பாடுக...