இடுகைகள்

ஆபாசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15 வயது சிறுமியைக் காக்க மாஃபியா குழுக்களோடு போராடும் அடியாள்! தி என்ஃபோர்சர்

படம்
  தி என்ஃபோர்சர் 2022 மாஃபியா கும்பலில் வேலை செய்யும் அடியாள், அதற்கு எதிராக திரும்பினால் என்னாகும்…. படத்தின் கதையில் புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஏராளமான படங்களில் பார்த்த கதைதான். அண்டானியோ பண்டாரஸ் நடித்திருக்கிறார் என்பதே படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம். பாராகுடா என்ற கூலிப்படை ஆளாக நடித்திருக்கிறார். கொலை, வெட்டுக்குத்து, மிரட்டல் வேலைகளை செய்து வருபவர் பாராகுடா. இவர் மனைவி ஓவியக்கண்காட்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் பள்ளி ஒன்றில் படிக்கிறாள். ஆனால் இவர்கள் யாருக்கும் பாராகுடா செய்யும் பாவ வேலை பிடிக்கவில்லை. ஆனால் பாராகுடா அதைவிட்டு வெளியே வரமுடியாத சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி என்ற தெருச்சண்டை போடும் இளைஞரை சந்திக்கிறார். அதாவது, பாராகுடாவின் பெண் முதலாளி புதிய அடியாளை தனது நிறுவனத்திற்கு கொண்டு வர நினைக்கிறார். இதற்காக தெருச்சண்டை போடும் ரிக்கியை த் தேர்ந்தெடுக்கிறார். இவர், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா, பாராகுடாவின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவானது என்பதே கதை. படத்தில் வன்முறையை விட மனிதர்களுக்கு இடையிலான பாச, நட்பு உணர்வுகளுக்கே இயக்குநர் ம

ஜென் இசட் இளைஞர்களின் ரகசிய வாழ்க்கை! - விக்கர், டிஸ்கார்ட், ட்விட்ச் - என்னதான் நடக்கிறது?

படம்
  டிஸ்கார்ட் ஆப் பெரும்பாலான ஆட்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், தடை கலாசாரம், ட்ரோல்கள் என இதற்கே பொழுது பத்தமாட்டேன்கிறது. ஆனால் ஜென் இசட் இளைஞர்கள் தண்ணீரை விட மேலானது என பச்சைத் தண்ணீர் விற்கும் நிறுவனங்களைப் போல பிரத்யேகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவை பலரையும் ஈர்த்தாலும் கூட இவை ரகசியமான பேச்சுகளுக்கு உதவாது. அங்குதான் ரெட்டிட், டிஸ்கார்ட், விக்கர், ட்விட்ச் போன்ற சமூக வலைத்தளங்களும் உள்ளே வருகின்றன.  இதில் வேகமாக நுழைந்து பல்வேறு ரகசிய செக்ஸ் பேச்சுகளிலும் கணினி விளையாட்டுகளிலும் முன்னேறி வருவது ஜென் இசட்டுகளோடு, 95க்குப் பிறகு பிறந்த ஜூமர் தலைமுறையும்தான். நிஜ உலகில் நண்பர்களைப் பெற முடியாத விரக்தியடைந்தவர்கள் அனைவருமே இங்கு ஒன்றாக கூடி பேசுகிறார்கள்... பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். பேச்சு எப்போதும் பேச்சாக முடியுமா என்ன? மேற்சொன்ன தளங்கள் எதிலும் நாம் பேசும் விஷயம் சார்ந்த விளம்பரங்கள் வருவது போன்ற அல்காரித பிரச்னைகள் கிடையாது. 2005ஆம்  ஆண்டு தொடங்கிய ரெட்டிட், இன்றுவரை பல்வேறு நபர்களின் கணினி முதல்பக்கமாக இருக்கிறது. இவர்கள்

இளைஞர்களின் மீதான இணையத் தாக்குதல் அதிகரிப்பு!

படம்
the conversation இணையம்தான் இன்று மக்கள் கூடும் டிஜிட்டல் பொது இடங்களாக உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கேலி, கிண்டல், வன்முறை, ஆபாசப்பதிவுகள்  என அனைத்தும் டிஜிட்டல் உலகிலும் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் பத்தில் ஒரு இந்தியர் இதுபோன்ற இணையத்தாக்குதல்களை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ எனும் தன்னார்வ அமைப்பு டில்லி பகுதியில் எடுத்த ஆய்வுப்படி, இளைஞர்கள் மீதான தாக்குதல் (13-18) 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மார்பிங் செய்த புகைப்படத்தைப் பார்ப்பதாகவும், அதுபற்றி காவல்துறையில் புகார் செய்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணையத்தாக்குதல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இணையம் சார்ந்த குற்றங்கள் 2018ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இணையத்தில்  சொற்கள் சார்ந்த வன்முறை இயல்பானதாக மாறிவிட்டது. தொலைவில் இருப்பதாலும், முகம் தெரியாது என்பதாலும் தன்னுடைய மனம் போல ஒ

உலகில் அதிகம் வெறுக்கப்படும் வார்த்தைகள்!

படம்
giphy MOIST ஈரப்பதம், ஈரக்கசிவு என பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தையை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெறுக்கின்றனர். இப்போது பேக்கரி விளம்பரம் வருகிறது. அதில் எங்கள் கேக் மிகவும் ஈரப்பதமான விதத்தில் இருக்கும். உங்களுக்கு சாப்பிடப்பிடிக்கும் என்பதற்கு சூப்பர் மாய்ஸ்ட் என்று பயன்படுத்தினால் அந்த விளம்பரம் வெற்றி பெறாது. பொருளும் மக்கள் வாங்குவது சந்தேகம். மேலும் சிலர் இதனை ஆபாசப்படங்களில் பயன்படுத்தும் வார்த்தையாகவும் பொருள் கொள்கின்றனர். இதனை எந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  DROOL உணவை எச்சில் வழிய பார்ப்பது என்பதுதான் இதன் பொருள். நாவல், கவிதை, பத்தி எழுத்து என அனைத்திலும் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அப்புறம் ஒருகட்டத்தில் ச்சீ  என்ன இது நாகரிகமில்லாமல் என்று மக்களுக்கு தோன்றியதால் இச்சொல்லை ஒரங்கட்டிவிட்டனர். PANTIES பெண்களின் உள்ளாடை. கூகுள் இறுக்கமான காற்சட்டை என பதில் தருகிறது. இதனை பெண்கள் வெறுக்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. உள்ளாடைகளை வெறுக்கவில்லை. இந்த சொல்லை வெறுக்கிறார்களாம். வுமன் அண்டர்வேர்

டீப் நியூட் ஆப்புக்கு என்ன இன்ஸ்பிரேஷன்?

படம்
எழுபது எண்பதுகளில் கண்ணாடி மூலம் பிறரின் ஆடை தாண்டி பார்க்குற கலாசாரம் இருந்துச்சு. டீப் நியூட் லோகோ கூட அதைத்தான் சொல்லுது. நான் பல பத்திரிகைகள், இதழ்கள் பார்த்துத்தான் இதை டிசைன் பண்ணினேன். இரண்டு, மூணு ஸ்டார்ட் அப் பண்ணினேன். எல்லாமே தோல்வி. அந்த நஷ்டத்தை இதில் ஈடுகட்ட முடியும்னு நம்பினேன். இந்த ஆப்பை செஞ்சதால நான் வாயேரிச ஆள்னு நினைச்சுராதீங்க. ஜஸ்ட் எனக்கு டெக்னாலஜின்னா புடிக்கும். அவ்வளவுதான். இப்போ நீங்க பார்த்த து பெண்களுக்கானது. அடுத்த ஆண்களுக்கானதை ரெடி செஞ்சு வருவேன். நீங்க பாத்த இந்த ஆப் ரெண்டு வருஷ உழைப்பில் ரெடியானது. பகல்ல பாக்குற போட்டோவை இரவுக்கு மாத்தும் டெக்னிக் பத்தி நிறைய படித்து கான் நெட்வொர்க்ஸ் மூலம் இதை செஞ்சேன். நிறையப் பேரு என்கிட்ட கேக்குறாங்க. இது தப்பில்லையா? பெண்களை நிர்வாணமாக காட்டுறதுன்னு... இதை நான் செய்யலீன்னா இன்னொருத்தர் செய்வார். இதை நீங்க தொழில்நுட்பமா பாக்கணும். டீப் நியூட் மட்டுமல்ல இதில் செய்யுறத நீங்க 30 நிமிஷ டுட்டோரியலைப் படிச்சா போட்டோஷாப் மூலமாக செய்யலாமே? Add caption நீங்க எந்த எண்ணத்துல இதில் இணைஞ்சிருக்கீங்களோ அது

டீப் நியூட் ஆப்பின் ஜெகஜால வேலை - பெண்ணை நிர்வாணமாக்கும் முறை!

படம்
டீப் நியூட் ஆப் எப்படி செயல்படுகிறது? பெண்களின் படங்களை அப்லோடு செய்தால் மிகச்சிறப்பாக செயல்பட்டு அவர்களின் ஆடைகளை விலக்கி முழு நிர்வாணமாக காட்டும் விதமாக உருவாகி இருக்கிறது டீப் நியூட் ஆப். ஆண்களின் படங்களுக்கும் பெண்களுக்கான உறுப்புகளைப் பொருத்திக் காட்டுகிறது. மிக குறைந்த உடைகள் இருந்தால் இந்த ஆப் குஷியாக செயல்படுகிறது. இணைய உலகில் காதலித்த பெண்களை பழிவாங்க ரிவென்ச் பார்ன் முறையில் அவர்களை பழிவாங்கி வருகின்றனர். இந்த லட்சணத்தில் டீப் நியூட் அவர்களுக்கு வசதியான ஆயுதமாகிவிடும். இது தவறு. என்கிறார் ரிவென்ஞ் பார்ன் முறைகளுக்கு எதிராக செயல்படும் கேட்லின் பௌடன். ஆனால் அதேசமயம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த ஆப், பதிவேற்றப்படும் படங்களை தானாகவே துகிலுரித்துக் காட்டினாலும் அது ஊகப்படம்தான். நிஜமல்ல. ஆனால் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் அதை விளக்க முடியாது. நினைத்து பார்க்க முடியாத நொடிகளில் உங்கள் மானம் கான்கார்டு விமானம் ஏறி செவ்வாய்க்கு சென்றுவிடும் என்பதும் சரியான வாதம்தான். மேலும் இந்த ஆப்பை பல்வேறு படங்களில் சோதித்த தில் நீச்சலுடை பெண்களின் படங