இளைஞர்களை விபச்சார வலையில் தள்ளி சம்பாதிக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் லீலைகள்!

 

 





 

 

 

 

 

69 சம்ஸ்கார் காலனி
தெலுங்கு
இயக்கம் சுனில்குமார்

இயக்குநர் சுனில்குமாரை நம்பி பார்த்து ஏமாந்துபோன படம். இவர் சாய் தரம் தேஜை வைத்தூ தீக்கா என்ற படத்தை இயக்கியவர். இதற்கு முன்னர் பல குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கியவர்.

அஞ்சலி என்ற நடுத்தர வயது பெண்ணின் மாடிவீட்டுக்கு கௌசிக் என்ற இளைஞனின் குடும்பம் குடிவருகிறது. இளைஞனுக்கு பெற்றோர் இல்லை. ஹாஸ்டலில் படிக்கும் தங்கை மட்டுமே உண்டு. அவரது மாமா குடும்பத்துடன் வாழ்கிறார்.
 
அந்த இளைஞனுக்கும் வீட்டு ஒனரின் மனைவியான அஞ்சலிக்கும் தகாத உறவு உருவாகிறது. இந்த உறவை அந்த நடுத்தரவயது பெண்ணே வலிந்து ஏற்படுத்துகிறார். இதற்கு காரணம், தன் கணவரின் இயலாமை என காரணம் சொல்கிறார். கௌசிக் என்ற இளைஞனும் உடலுறவு வேகத்தில் அனைத்தையும் மறந்துவிடுகிறார். மறந்துபோவது எப்படி இருக்கிறதென்றால், அவரது தங்கைக்கு அரசு விடுதியில் பாலியல் சீண்டல்கள், நெருக்கடியை வார்டன் ஏற்படுத்தினாலும் கண்டுகொள்வதில்லை.

ஒருகட்டத்தில் அவர் அஞ்சலியை தவிர எதையும் கவனிப்பதில்லை என்ற நிலைக்கு வருகிறார். அஞ்சலியை திருமண வாழ்க்கையிலிருந்து மீட்க பணம் வேண்டும். அதை போலீஸ் சாடிச கணவனுக்கு கொடுத்தால், போதும். எனவே கௌசிக், விபசாரத்தை செய்கிறார். பல பணக்கார பெண்களுக்கு இரவில், பகலில் பாலின்பத்தை வழங்குகிறார். சம்பாதித்த பணத்தை காதலியாக நினைக்கும் அஞ்சலிக்கு வழங்குகிறார்.

படத்தில் வரும் கௌசிக், அஞ்சலி, புரோக்கர் திவாகர், அஞ்சலியின் போலீஸ் கணவர் என அனைவருக்குமே அவரவருக்கான சுயநலம் உள்ளது. அதை நோக்கியே செல்கிறார்கள். இதில் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் உள்ளன. அஞ்சலியை கௌசிக் காதலிப்பதாக சொல்கிறார், ஆனால் அது ஏற்கும்படியாக இல்லை. இல்லை என்றால் எந்த இடத்திலுமே இல்லை.

அஞ்சலி, கௌசிக்கிற்கு வேலை கிடைக்க சில உதவிகளை செய்கிறார். அதை வைத்து கௌசிக் வேலைக்கு போனாரா என்றால் இல்லை. வேலையில்லை என்பதால், பணத்திற்கு கஷ்டம், பாராமுகமாக உள்ள அத்தை வேறு திட்டுகிறார் என காசு சம்பாதிக்க வேலைகளை செய்தாரா என்றால் அதுவும் இல்லை. அறையில் விளக்கை அணைத்து, போட்டு காதலில் மூழ்கிப்போகிறார்.

படத்தில் வரும் எந்த பாத்திரமும் சரியானபடி எழுதப்படவில்லை. காட்சிபடுத்தப்படவும் இல்லை. ஏதோ, சமூக நாடகம் பார்ப்பது போல உள்ளது. அதிலும் நாயகனின் தங்கையை உறவுக்கு அழைக்கும் வார்டன் பாத்திரம் எல்லாம் ஸ்..அப்பா அவர் நடிப்பை பார்த்தால் மண்ட மனோகர் வேறு நினைவுக்கு வந்து தொலைகிறார். முறுக்கு பிழிவது போல கையை சுற்றிக்கொண்டு வசனம் பேசுகிறார்.

படத்தைப் பார்க்க எஸ்தர் நோராவின் உடல் போதும். அதிலுள்ள மார்பு, இடுப்பு, தொப்புள்குழி அதிகம். வேறு ஏதும் தேவையில்லை என நினைத்து எடுத்திருக்கிறார்கள். இளைஞர்களை வளைத்துப் போட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தி காசு சம்பாதிக்கும் மாஃபியா குழுவைப் பற்றிய கதை. ஆனால், அதை சொல்லிய விதம் அலுப்பைத் தருகிறது. பெரிய முரண்கள் இல்லாத கதை. காதல் பித்தில் நாயகன் மூழ்கி இறுதியாக அஞ்சலியால் குத்துப்பட்டு சாக கிடக்கிறான். அப்போது அவனைப் பார்க்க வந்த தங்கையை, நாயகனின் விபச்சார புரோக்கர் அவனது நண்பர்கள் காரில் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். அதை நாயகன் பார்த்தபடியே உயிரை விடுகிறான். தங்கை, அண்ணன் சிக்கிய அதே விபச்சார வலையில் மாட்டிக்கொள்கிறாள். இப்படியாக படம் ஒருவழியாக நிறைவுபெறுகிறது. மாஃபியா குழுவைப் பற்றிய விவரிப்பை அளித்தால் கூட பரவாயில்லை என்று கூறலாம். இத்தனைக்கும் படம் எடுத்த இயக்குநர், கோகிலா, சிட்டி ரவுண்ட்அப் என்ற பெயர்களில் பத்திரிகைகளை நடத்திய அனுபவம் கொண்டவர். எதுவும் பிரயோஜனப்படவில்லை.

ஒளிப்பதிவு, கல்யாண வீடியோ போல எடுத்திருக்கிறார்கள். இசையா, சன்டிவி சீரியல்களே தோற்றுவிடும். கொடூரம். உண்மையில் இசையே இல்லாமல் படம், வசனம் மட்டுமே வைத்து பொருட்களின் சூழல் ஒலி வைத்து எடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். படத்தின் நாயகன் தயாரிப்பாளரின் மகனா என்று தெரியவில்லை. அப்படியொரு மோசமான நடிப்பு.... எப்போதும் தாடியுடனே திரிகிறார். நடிகை எஸ்தர் நோரா, நடிகர் அஜய் ஆகியோர் பாத்திரமும் குழப்பமானதுதான். படத்தில் இவர்கள் மட்டுமே ஆறுதலளிக்கிறார்கள். 

89 என்ற ஆபாச வலைத்தளம் ஒன்றிருந்தது. அதை நினைவுபடுத்துகிறது படத்தின் #69 தலைப்பு. கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாம்தான்.

கோமாளிமேடை டீம்
 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்