அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி - காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன?

 

 


 

 காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன?
மிஸ்டர் ரோனி

ரிச்சர்ட் காரிங்க்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர். சூரியனை கண்காணித்து அதன் மாற்றங்களை பதிவு செய்தவர். அதன் மேற்புறத்தில் நடைபெறும் சுழற்சி, சீரற்றதாக உள்ளது என கண்டுபிடித்துக் கூறினார்.

சூரியனில் நடைபெறும் வேதி வினைகள் காரணமாக மின்காந்த அலைகள் அதிகளவில் வெளியேறுகிற நிகழ்வை காரிங்க்டன் நிகழ்ச்சி என்று கூறுகிறார்கள். 1859ஆம் ஆண்டு வானியலாளர் காரிங்க்டன் இப்படியான நிகழ்ச்சி ஒன்றை பதிவு செய்தார். அன்று, மின்காந்த அலைகளின் பாதிப்பு உலகிற்கு பெரிதாக இல்லை. மின்னணு பொருட்கள் குறைவாக பயன்பாட்டில் இருந்தன. மின்சார வசதிகளும் பேரளவில் பரவலாகவில்லை. ஆனால் தந்தி முறை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அலுவலகங்களில் நெருப்பு பற்றிக்கொண்டது. முழு எந்திரங்களையும் பாதித்தது.

சூரிய மின்காந்த தாக்குதல், சீரான இடைவெளியில் நடப்பவை என கணிக்க முடிவதில்லை. இந்தமுறை அதுபோல தாக்குதல் நடந்தால், செயற்கைக்கோள்கள் நிரந்தரமாக பழுதாகும். பூமியில் உள்ள தகவல் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்படும். அமெரிக்க அறிவியல் அகாடமி இதுபற்றிய ஆய்வை செய்து, பொருளாதார இழப்பு 2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. எந்திரங்களை பழுது பார்த்து நிறுவுவதற்கும் கூட பல்லாண்டுகள் தேவை. இதுவரை காரிங்க்டன் நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதால், இனிமேல் நடக்கவே நடக்காது என்று கூற முடியாது. தயாராக இருப்பதே சிறப்பு.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்