குளிர்பதனப்பெட்டி கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் பிணைப்பில்லாத நீர், மேட்ரிக்ஸ் உலகம், உடலின் மிகப்பெரும் மூலக்கூறு - மிஸ்டர் ரோனி
1930ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், குறிப்பிட்ட சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அந்த சாதனத்தின் பெயர் என்ன?
குளிர்பதனப்பெட்டி (தமிழாக்க நன்றி- மனோபாலா நாயுடு). இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ ஸில்லார்ட் என இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர். இப்பெட்டி, தெர்மோடைனமிக்ஸ் விதிகளின்படி இயங்குகிறது. 1920ஆம் ஆண்டு குளிர்பதனப்பெட்டியின் சீல் உடைந்து நச்சு வாயு வெளியாகி, ஒரு குடும்பமே இறந்துபோனது. அந்த காலத்தில், அதில் நச்சுவாயுவின் பயன்பாடு பரவலாக இருந்தது.
குளிர்பதனப்பெட்டியில் வெப்பம் பெறப்பட்டு, மூடிய குளிர்ந்த இடத்தில் செலுத்தப்பட்டு குளிர் உருவாக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட காரணத்தால், ஆல்பர்ட், குளிர்பதனப்பெட்டியில் நகரக்கூடிய பாகமே இருக்கக்கூடாது. குளிர்ச்சி ஏற்படும் பொருள் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருக்கவேண்டும் என நினைத்தார். அவர் உருவாக்கிய வடிவமைப்பு சற்று சிக்கலானது. பரவலாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கூட வெப்பத்தால் இயங்கும் பல்வேறு சாதனங்கள் ஆல்பர்டின் ஆய்வால் பயன்பெற்றன.
2
வினோதமான கணினி உலகை அடையாளம் காட்டிய மேட்ரிக்ஸ் படம் எப்போது வெளியானது?
1999 என்று கூறுபவர்கள் அவுட். 1976ஆம் ஆண்டு வெளியான டாக்டர் ஹூ சீரியலில், கணினி உலகில் நாயகன் சென்று வில்லனை வேட்டையாட முயல்வார். அப்போது கணினி அமைப்பு அவருக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கும். மெய்நிகர் உலகில் அவர் இறந்துவிட்டால், நிஜ உலகிலும் அவர் இறந்துவிடுவார் என்று.
அப்போது மேட்ரிக்ஸ் படத்தை எடுத்த வாச்சோஸ்கி இரட்டையர் சிறுவர்களாக இருந்திருப்பார்கள். டிவியில் டாக்டர் ஹூவைப் பார்த்து ஊக்கம் பெற்று தி மேட்ரிக்ஸ் படத்தின் கதையை எழுதியிருக்கலாம். அன்று டாக்டர் ஹூ சீரியல், அமெரிக்காவில் வெகுவாக பார்வையாளர்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று.
3
நமது உடலை உருவாக்கியதில் பெரிய மூலக்கூறு எது?
உயிரினங்களிலேயே மனித உடல்தான் சிக்கலான பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. கூடவே இதில் கார்பன் உள்ளது. மனித உடலில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை என்ன? 1 என்ற எண்ணுக்கு பின்னால் 27 பூஜ்ஜியங்களைப் போட்டால் தெரிந்துவிடும்.
உடலிலுள்ள பெரிய மூலக்கூறின் பெயர் குரோமோசோம் 1. உடலின் செல்கள் ஒவ்வொன்றிலும் 23 குரோமோசோம்கள் உண்டு. இவை, டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதை ஆய்வகங்களில் நுண்ணோக்கிகளில் பார்த்தால் சுருண்டு, குட்டையாக பருமனாக இருப்பது போல தெரியும். ஆனால் இது உண்மை அல்ல.
இயற்கையில் மனித உடலிலுள்ள குரோமோசோம்தான் பெரியதா என்றால் கிடையாது. கோதுமையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் குரோமோசோம் நம்மை விட நான்கு மடங்கு பெரியது. மனித உடல் என்று வரும்போது, குரோமோசோம் 1 வெல்கிறது.
4
ஹைட்ரஜன் பிணைப்பு இல்லாதபோது, நீரின் கொதிநிலை என்ன?
நீர் என்பது உருவாகவே ஹைட்ரஜன் தேவை. அப்படி அவசியமான ஒன்று இல்லை என்றால் பூமியில் நீர் இருக்காது. உயிரினங்களே உருவாகியிருக்க முடியாது அல்லவா? அப்படியே நீரில் ஹைட்ரஜன் இல்லை எனக்கொண்டால், அதைக் குடித்தாலும் உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறாது. ஹைட்ரஜன் இருப்பதால்தான், நீர் பிற பொருட்களை வாயுக்களை கரைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. உடலில் செல்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல உதவுகிறது, உலகில் உயிர்கள் இருக்கவேண்டுமெனில், ஹைட்ரஜன் பிணைப்பு அவசியம்.
கொதிநிலைதானே? ஆ... மைனஸ் நூறு டிகிரி செல்சியஸ் அல்லது மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் என வைத்துக்கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக