இடுகைகள்

உடல்எடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பை முதன்மையாக கொண்ட கீட்டோ உணவுமுறை!

படம்
  கீட்டோ உணவுமுறை கீட்டோஜெனிக் உணவு கீட்டோ உணவு முறைக்கு, என்ன அர்த்தம். பெயர் ஃபேன்சியாக கொண்ட உணவுமுறை என்பதல்ல பதில். குறைந்த மாவுச்சத்து, அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுமுறை என்று அர்த்தம். தினசரி இருபது அல்லது முப்பது கிராம் அளவுக்கு மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளும் உணவுமுறை கீட்டோ. ஒரு ஆப்பிளில் உள்ள மாவுச்சத்தின் அளவு. உணவுமுறையில் மாவுச் சத்தைக் குறைத்தால் ஒருவருக்கு ஏற்படும் பசியின் வேகம் குறையும். இதன் வழியாக உடல் எடை குறையும். மாவுச்சத்து, புரதம் ஆகிய இரண்டையும் குறைத்துவிட்டு உடலின் தேவைக்கான ஆற்றல் கொழுப்பு மூலம் பெறப்படுகிறது.   ஒருவரின் உடலுக்கான ஆற்றல்   70-80 சதவீதம் கொழுப்பிலிருந்தும். 15-20 சதவீதம் வரை புரதத்தில் இருந்தும், 5-10 சதவீதம் வரை மாவுச்சத்தில் இருந்தும் பெறப்படுகிறது. அமெரிக்கர்கள், தமது உடல் ஆற்றலை மாவுச்சத்திலிருந்து 50 சதவீதமும், புரதத்திலிருந்து 15 சதவீதமும், கொழுப்பிலிருந்து 30 சதவீதமும் பெறுகிறார்கள். புரத தேவையைக் குறைத்து உணவுமுறையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் 65 வயதுக்கு மேலும் நலமுடன் வாழ முடிவதாக ஊட்டச்சத்து அறிவியல் தொடர்பான ஆய்வறிக்கை தகவல் கூ