இடுகைகள்

கண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட பெண்மணி, கண்களை மட்டும் வெட்டியெடுத்த ஆசிரியர்!

படம்
  அசுரகுலம் 3 ரத்த சாட்சி 1.0 மின்னும் கண்கள். தொண்ணூறுகளில் அமெரிக்காவில் குற்றச்சம்பவம் நடைபெற்றது. விலைமாதுக்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆனால் அவர்களின் கண்கள் மட்டும் அறுவை சிகிச்சை மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட்டது போல இருந்தது. ஆனால் யார் இதை செய்தது என காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒருவரின் கொலை முயற்சியில் தப்பித்த பெண் ஒருவர் காவல்துறையினர் உதவியை நாடினார். அந்த நபர் பற்றி விசாரித்தபோது அவர் பெயர் சார்லஸ் ஆல்பிரைட் என்று தெரிய வந்தது. இவர், பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக  வேலை செய்துகொண்டிருந்தார். மேலும் பேஸ்பால் விளையாட்டுக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். இவர்தான் பெண்களைக் கொன்று கண்களை மட்டும் வெட்டி எடுத்தவர் என காவல்துறையினர், அவரது அறையை சோதித்து முடிவு செய்தனர். சார்லஸிற்கு பெண்களின் உடல் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது. அவருக்கு பிடித்தது கண்கள்தான். அதுதான் அவரை கொலை செய்வதற்கான ஈர்ப்பை உருவாக்கியது. பின்னாளில் சிறையில் இருந்தபோது கூட சுவற்றில் கண்களை வரைந்து வைத்துக்கொண்டே இருந்தார். ஃபெட்டிஷ் என முன்னர் சொன்னது போல குறிப்பிட்

அதிர்ச்சியால் ஒருவருக்கு தலைமுடி நரைத்துபோகலாம்! - உண்மையா? பொய்யா?

படம்
        1. ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிர்ச்சியால் ஓரிரவில் முடி வெள்ளையாக வாய்ப்புள்ளது . ரியல் : இந்த ரீலுக்கான ஆதாரம் 1793 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த புரட்சியில் அடங்கியுள்ளது . அப்போது ராணி சிறைபிடிக்கப்பட்டார் . அடுத்தநாள் கில்லட்டினால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்போது , அவரின் தலைமுடி முழுவதும் வெள்ளிக்காசு போல நரைத்துப் போயிருந்தது . இதைக் காரணம் காட்டி அதிர்ச்சியால் தலைமுடி ஓரிரவில் நரைக்கலாம் என்கிறார்கள் . அது சாத்தியமல்ல . நம் உடலுக்கு வயதாகும்போது தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனின் சுரப்பு குறைகிறது . இதனால்தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சிலருக்கு ஏற்படுகிறது . இந்த எண்ணிக்கை அதிகரித்தால் , ஒருவரின் தலைமுடி முழுக்க வெள்ளையாகும் . இந்நிலைக்கு கனிடைஸ் சப்டிடா (Canities Subita) என்று பெயர் . மெலனின் , ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளையும் உருவாக்குவதால் , முடியை வெளுத்துப்போகச்செய்வதில் அதன் பங்கும் உண்டு . ஆனால் இது ஓரிரவில் நடக்காது . 2. சாலை விபத்துகளை வாகனங்களிலுள்ள விளக்குகள் தடுக்கின்றன . ரியல் : உண்மை . பல்வேறு பருவ க

கண்களின் அமைப்பு நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி மனிதர்களுக்கு விதவிதமான கண் அமைப்புகள் உள்ளது ஏன்? கண்களின் மேல் இமை கீழே உள்ள கண்களை இணைப்பதில்தான் இவை மாறுகின்றன. இமைகளுக்கு முக்கிய பணி, கண்களை பல்வேறு பருவச்சூழல் மாறுபாடுகளிலிருந்து காப்பதுதான். எனவே நிலப்பரப்பு சார்ந்து மனிதர்களுக்கு கண்களின் அமைப்பு மாறுபடுகிறது. தெற்காசியர்கள், கிழக்கு ஆசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோருக்கு கண்களின் அமைப்பில் இந்த வேறுபாடு தெளிவாக தெரியும். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்கிறார்கள். நன்றி - பிபிசி

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

நம் காதுகளை மட்டும் தூங்கும்போது கூட மூடமுடிவதில்லை ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கண்களை மூடுவது போல காதுகளை நாம் ஏன் மூடிவிட முடிவதில்லை? கண்களை மூடினால் காது விழித்திருக்கும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படி அறிந்துகொள்வது? கண்களை மூடிக்கொண்டு தூங்கினாலும், வீட்டுக்குள் யாரே உள்ளே வருவதை எப்படி அறிகிறோம்- காதுகள் திறந்திருப்பதால்தான். இது ஆதிகாலத்திலிருந்து நமக்கு இயற்கை கொடுத்துள்ள ஃபயர்வால் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வருத்தமும் இருக்காது. அனைத்து விலங்குகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும். ஆனால் சீல் போன்றவை நீந்தும்போது மட்டும் அதன் காதுகளை மூடிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி 

கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி உலகில் உள்ள பல்வேறு நாட்டினருக்கும் கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்? நம் கண்கள் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம். ஐம்புலன்களில் கண்களை மூடினால்தான் பலருக்கும் தூக்கம் வரும். ஐம்புலன்களும் சராசரியாக செயல்படும்போது அதன் திறன் நமக்குத் தெரியாது. டேர்டெவில் போல கண்கள் செயலிழந்தால், பிற புலன்கள் அதற்கு ஈடுசெய்யும்படி உழைக்கும். கண்களின் அமைப்புக்குக்கு காரணம், நம் உடலிலுள்ள செல்களின் திறன்தான். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் நிலப்பரப்பு தன்மையை உடல் பெற்றிருக்கும். இதனால் உடல் பாதிக்காதபடி உறுப்புகள் அமைகின்றன. கண்களின் மேல் இமை, ரெட்டினாவை சுற்றி அமைந்துள்ள வடிவத்தின் மாறுபாட்டை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்று குறிப்பிடுகிறார்கள். நன்றி - பிபிசி

கண்களை நீலநிற ஒளி பாதிக்கிறதா?

மிஸ்டர் ரோனி நீல நிற ஒளி தூக்கமின்மைக்கு காரணமா? இன்று போன், கணினி என பல்வேறு டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில்தான் படிக்கிறோம். சிரிக்கிறோம். சம்சாரிக்கிறோம். இதன் பாதிப்புகள் பார்வை இழப்பு, தூக்கமின்மை என்று கூறுகிறார்கள். உண்மையா? நிச்சயம் இல்லை. எலிகளிடம் இதுபற்றி சோதனை நடத்தப்பட்டது. அதிக செறிவிலான நீலநிற ஒளிக்கதிர்கள் அவற்றின் பார்வைத்திறனை பாதித்த து உண்மைதான். ஆனால் மனிதர்களின் விஷயத்தில் இது மாறுபட்டது. உண்மையில் சூரியனிலிருந்து வெளிவரும் நீலநிற ஒளி என்பது மிக அதிகம். அதை எப்போதேனும் பார்த்திருப்பீர்கள். அதைவிட கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ஆகியவை குறைவான ஒளியைக் கொண்டவை.அவை எப்படி உங்கள் பார்வையைப் பாதிக்கும்? இதன் பொருள் அவை பாதிக்காது என்பதல்ல. அதன் அலைநீளம் இதில் முக்கியமானது. கண்களிலுள்ள அமைப்பு இயல்பாகவே நீலநிறத்தை தடுக்கும் திறன் கொண்டது. குளிர்கண்ணாடிகள் கண்களின் பாதிப்பைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். கண்களிலுள்ள ஆர்பிசிசி எனும் செல்கள் கணினியிலுள்ள நீலநிற ஒளியைப் பார்த்து விழித்திருக்கலாம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால்தான

பொருட்களின் அளவு கண்களைப் பொறுத்து மாறுமா?

படம்
மிஸ்டர் ரோனி இருகண்களில் ஒன்று பழுதாகிவிட்டால், மற்றொன்று மூலம் பொருட்களை எளிதாக பார்க்கலாமா? பொருட்களின் அளவு பற்றி நம் நினைவில் ஏற்கனவே சில வரையறைகள் இருக்கும். எனவே, நீங்கள் ஒற்றைக் கண்ணில் பொருளைப் பார்க்கும்போது அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த தன்மையை பைனாகுலர் டிஸ்பாரிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணில் ஓர் பொருளைப் பார்க்கும்போது, அதில் வேறுபாடுகள் தெரியும். ரயில்வே பாதைகளைப் பார்த்தால் நமக்குத் தெரிவது மோஷன் பாரலாக்ஸ் எனும் தன்மை. நீண்ட தூரத்திற்கு ஒன்றுபோலவே இருப்புப் பாதைகள் தெரியும். நன்றி- பிபிசி

கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!

படம்
பொய் சொல்லும் கண்கள்? போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள். தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை. ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது. இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால்