இடுகைகள்

கருப்பு இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளச்சாராய தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது? - அரசு மதுபானச்சாலைக்கு நிகரான ஆள்பலம், கட்டமைப்பு!

படம்
            பஞ்சாப்பில் நடந்த கள்ளச்சாராய பலி விவகாரத்தில் பல்வீந்தர் கௌர் என்ற பெண் சிக்கினார் . இவரும் ஒருவகையில் சமூக தொழில்முனைவோர்தான் . ஆம் . இந்த மாநிலத்தில் மட்டும் அரசு மதுபானச்சாலை போன்ற சட்ட விரோத நெட்வொர்க்கை உருவாக்கி இருபது ஆண்டுகளாக தொழிலை நடத்தி வந்திருக்கிறார் . பஞ்சாப் அரசு மதுபானச்சாலை மூலம் வரியெல்லாம் கட்டி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது . கள்ளச்சாராய வியாபாரமும் இதற்கு இணையான வருமானத்தைக் கொண்டுள்ளது . இதற்கென தயாரிப்பு , விநியோகம் , வருமானத்தை பிரித்துக்கொள்வது என அனைத்திலும் அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , கள்ளச்சாராய தயாரிப்புக்குழுவினர் ஒருங்கிணைந்து கையிலுள்ள ஐந்து விரல்களைப்போல இணைந்து வேலை பார்த்து சாதித்து உள்ளனர் . மூன்சைன் , மூச் , பாத்டப் ஜின் , கள்ளச்சாராயம் என பல்வேறு பெயர்கள் பல்வேறு மாநிலங்களில் புழங்குகின்றன . எப்படி தயாரிக்கிறார்கள் ? சிம்பிள் . சர்க்கரை எந்த காய்கறிகள் , பழங்களில் உள்ளதோ அனைத்தையும் நன்றாக இருந்தாலோ , கெட்டுப்போயிருந்தாலோ கவலையே படாமல் சாராயம் தயாரிக்க பயன்படுத்தலாம் . ப...

பெருகிவரும் கள்ளச்சாராய இறப்புகள்! - நத்தை வேகத்தில் நடக்கும் விசாரணை! - டேட்டா கார்னர்

படம்
              மக்களை பலிகொள்ளும் கள்ளச்சாராய தயாரிப்பு! - தற்சார்பு இந்தியா  அண்மையில் பஞ்சாபில் கள்ளச்சாரய பாதிப்பில் நிறைய பேர் பலியானார்கள் . உண்மையில் அரசின் மதுபானச்சாலை வருமானத்தின் அளவு கள்ளச்சாரயமும் பல்வேறு மாநிலங்களில் புழங்கி வருகிறது . அரசுக்கு தெரியாமல் இவை நடப்பதில்லை . அப்படி காட்டிக்கொள்வார்கள் . அவரவர்களுக்கான பங்கை கொடுத்துவிட்டால் பூசல் ஏது , சண்டை எதற்கு ? கொண்டாட்டம்தானே ? இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் கள்ளச்சாராயம் மூலம் மட்டும் 800 பேர்களுக்கும் மேல் பலியாகியிருக்கிறார்கள் . எதற்கு இந்த தொழிலை செய்கிறார்கள் ? குறைந்த முதலீட்டில் நினைத்துப் பார்க்கமுடியாத லாபம் கிடைக்கிறது . பெரும்பாலும் உள்ளூரில் வலுவான அரசியல் பின்னணி கொண்டவர்கள் தங்களின் பகுதிநேரத் தொழிலாக கள்ளச்சாராயம் விற்பதைக் கொண்டிருக்கிறார்கள் . பஞ்சாபில் கள்ளச்சாராய சாவுகள் தொடங்கிய தேதி ஜூலை 29, 2020. முதலில் சாராயம் குடித்த ஐந்து பேர் கைலாசம் சென்று சேர்ந்தனர் . இவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முச்சல் , தங்கரா கிராமத்தைச் சேர்ந்...

மீண்டும் எழுச்சி பெற்று தாக்குதலைத் தொடங்கியுள்ள மாவோயிஸ்ட் அமைப்புகள்! - அதிரடி தாக்குதல்கள் தொடங்கின!

படம்
நக்சலைட்டுகள் - மாலைமலர் தாக்குதலைத் தொடங்கிய மாவோயிஸ்டுகள்   கடந்த ஜூலை 14, 15 தேதிகளில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தெலங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் துப்பாக்கிச்சூடுகளை நடத்தினர். இவர்கள் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முதல் மாவோயிஸ்டுகள் அமைதி காத்து வந்தனர். மத்திய மாநில படைகள் இங்கு ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். தெலங்கானாவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா என்பவர் மாவோயிஸ்ட் படையைத் தொடங்கினார். தற்போது புதிய மாவோயிஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவில் தெலங்கானாவிலிருந்து பத்து பேரும், ஆந்திரம், மகாராஷ்டிரம், கொல்கத்தாவிலிருந்து தலா இரண்டு பேரும், ஜார்க்கண்ட் நான்கு பேரும், பீகாரிலிருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி பலரும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர் என்கிறது காவல்துறை. ”சத்தீஸ்கரிலுள்ள இந்த அமைப்பின் த...

உணவுக்காக கரும்பு வெட்டச்செல்லும் பழங்குடி மாணவர்கள்! - பள்ளிகள் திறக்கப்படாததால் அவலம்!

படம்
உணவின்றி தவிக்கும் பழங்குடி மாணவர்கள் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில்: ஜெயலக்ஷ்மி ராமானுஜம் தமிழ்நாடு முழுக்க கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் பீதியில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் பள்ளியில் அளிக்கப்பட்டு வந்தத மதிய உணவுத்திட்டத்தை நம்பியிருந்த பழங்குடி மாணவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். பசி இப்போது அவர்களை கூலித்தொழிலாளர்களாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் 43 லட்சம் மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். 1956ஆம்ஆண்டு மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் மூலம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. அந்நாளில் நிறைய மாணவர்கள் வசதியின்மையால் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அதனை மாற்றி கல்வி மூலம் அவர்களை முன்னுக்கு கொண்டுவர காமராஜர் நினைத்தார். அதற்காக அவர் பள்ளியில் ஒருவேளை உணவேனும் அளிக்கவேண்டும் என மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்தார். இதற்கான நிதியைக்கூட அன்றைய மத்திய அரசு அளிக்க முடியாது என கையை விரித்துவிட்டது. மக்கள் பலரிடமும் நிதிபெற்று இத்திட்டத்தை முதல் அமைச்சர் காமராஜர் கொண்டு வந்தார். ...

சுகாதாரமான நீரை பெறுவதில் தடைகள் உள்ளன! - நோய்த்தொற்று காலத்தில் குடிநீர் வசதிகள்

படம்
பெருந்தொற்றும் நீர்ப்பிரச்னையும் பெருந்தொற்று இந்தியாவில் உள்ள பிற பிரச்னைகளை அணுகுவதையும் கடினமாக்கி உள்ளது. நோய்த்தொற்று காரணமாக பலரும் வெளியே வருவதையே தவிர்க்க முயன்றுவருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவை கூட பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் உணவு கொடுத்தாலும் கூட குடிக்க நீரின்றி எப்படி வாழ்க்கையை ஓட்டுவது. மும்பையிலுள்ள அம்பேத்கர் நகர் குடிசைப்பகுயில் 150க்கும்மேற்பட்ட குடும்பங்கள் இந்நிலையில் உள்ளன. இங்கு தினசரி காலையில் தண்ணீர் லாரி இரண்டுமணி நேரம் நீர் விநியோகம் செய்கிறது. இதில் தண்ணீரைப் பிடிப்பவர்கள் அதனை அன்று துணிதுவைக்க அல்லது குளிக்கத்தான் பயன்படுத்த முடியும். இரண்டில் ஏதாவது ஒன்று என்ற நிலைமையில்தான் தண்ணீர் அவர்களுக்கு கிடைக்கிறது. நீர்த்தொட்டி போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் நீரை அதன் மூலம் சேமிக்கவும் முடிவதில்லை. உலக சுகாதாரம் பெருந்தொற்று பாதிப்பால் பாதிக்கப்படாமலிருக்க மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வலியுறுத்தி வருகிறது குடிக்க, அன்றாடத் தேவைகளுக்கான நீருக்கே போராடி வரும் இந்தியா போன்ற ஏழை நாட்டில், கைகளை அடிக்கடி கழுவும்...

வைரசை விட அகதிகளை பயமுறுத்தும் பசி!

படம்
கருப்பு இந்தியா! மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வந்த ரோஹிங்கயா முஸ்லீம்கள் உங்களுக்கு நினைவுக்கு வருகிறார்களா? அவர்களையும்உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலுள்ள மக்களையும் காலிஞ்சி கன்ச் அருகிலுள்ள சரண் விகார் முகாம்களில் தங்க வைத்துள்ளது. அரசு அவர்ளுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்கினாலும் அவர்களது வாழ்க்கை பசியும் பயமுமாகவே கடக்கிறது.  டில்லியிலுள்ள காலிஞ்சி கன்ஞ் முகாமைக் காணச்சென்றால் நம்மை வரவேற்பது ஆளுயுரத்திற்கு குவிந்துள்ள மருத்துவக்கழிவுகள்தான்.இங்கு நோயாளிகளுகு பயன்படுத்திய சிரிஞ்சுகள், குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்து புட்டிகள், ரத்தத்தை துடைத்துப்போட்ட பஞ்சுகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் என ஏராளமாக குவிந்துள்ளன. இங்கு மக்களில் பெரும்பாலானோர் மருத்துவ கழிவுகளை ஒப்பந்ததாரரிடம் பெற்று அதனை விற்று வயிற்றுப்பாட்டை கவனிக்கின்றனர். ஒரு கிலோ மருத்துவக்கழிவை பன்னிரெண்டு ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.  இங்குள்ள சிறுவர்கள் விளையாட்டைக் கூட அங்குள்ள மருத்துவக்கழிவுகளை வைத்தே திட்டமிடுகின்றனர். அங்கு சென்று பார்த்தபோது சிறுவர்களுக்கு இடையில் அதிக சிரிஞ்சுகளை யார் பொற...

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல...

ஆதிதிராவிடர்களுக்கு நிதி செலவிடாத அமைச்சர்கள்!

படம்
கருப்பு இந்தியா! பிக்சாபே ஆண்டுதோறும் ஆதிதிராவிடர்களுக்கு இரண்டு முதல் இருபது சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு உண்டு. ஆனால் இதனை மக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன இந்திய அரசிலுள்ள 41 அமைச்சகங்களில் கிராம மேம்பாட்டுத்துறை மட்டுமே இதில் பாஸ் மார்க் வாங்கியுள்ளது. அமைச்சகங்கள் ஆதிதிராவிடர்களுக்கென அளிக்கப்பட்ட நிதியை பொது திட்டங்களுக்கு செலவழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. 50-60 சதவீத அமைச்சகங்கள் இம்முறையில்தான் செயற்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை சமக்ரா சிக்ஷா எனும் உணவுத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளன. கேள்விகளை எழுப்பினால் உடனே இந்த நிதி திட்டமிட்டு எஸ்சி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டுமென அரசு வலியுறுத்தவில்லை. எனவே நிதி குறைவாக உள்ள திட்டங்களுக்கு இந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர். இதே காரணத்தை பிற சாதிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்வார்களா? கேள்வி எழுப்பியபின்னும் திமிரோடு இப்படி பேச முடியுமா? என நாமே நினைத்து மனதில் சொல்லிப் பார்க்கவேண்டும். 2019 -2020 க...

மலக்கழிவை அள்ளினாலும் சாதிக்க முடியும்! - இரு உதாரணங்கள்!

படம்
கருப்பு இந்தியா! அவமதிப்பு வாழ்க்கையை மாற்றியது! விமல்குமார் தன் பள்ளி வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம் கண்கலங்குவார். காரணம் ஹரியானாவிலுள்ள குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ளது அவரது ஊரான லத்வா நகரம். அதிலுள்ள வால்மீகி பஸ்தி என்ற பகுதியில் அவரது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர். தந்தைக்கு மார்க்கெட்டில் வேலை. தாய்க்கு வீடுகளை சுத்தம் செய்து கூட்டிப் பெருக்குவது. விமல்குமார் மட்டுமல்ல அவர் பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே மலக்கழிவை அள்ளுவது கூட்டி பெருக்குவது, அருகிலுள்ள சந்தையில் வேலை செய்வது என வாழ்ந்த வந்த மக்கள்தான். இதனால் அவர்கள் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் அதிகம். விமல்குமார் பள்ளியில் பணியாற்றும்போது அவரின் அம்மா பள்ளி மைதானம், வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்துகொண்டு இருப்பார். அதைப்பார்த்துக் கொண்டு விமல் கண்ணீரை அடக்கிக்கொண்டு இருப்பார். அவரின் சாதிப்படி வேலை என்று கிடைப்பது அதுதான். பள்ளி விட்டதும், தன் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு இருவருமாக வீடு திரும்புவார்கள். படிப்பில் தொடக்கத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லைதான். ஆனால் ஏழாவது மற...

தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!

படம்
கருப்பு இந்தியா கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது. சன்ஜோக் குழு...