சுகாதாரமான நீரை பெறுவதில் தடைகள் உள்ளன! - நோய்த்தொற்று காலத்தில் குடிநீர் வசதிகள்




Bottle, Mineral Water, Bottle Of Water, Drinking Water

பெருந்தொற்றும் நீர்ப்பிரச்னையும்

பெருந்தொற்று இந்தியாவில் உள்ள பிற பிரச்னைகளை அணுகுவதையும் கடினமாக்கி உள்ளது. நோய்த்தொற்று காரணமாக பலரும் வெளியே வருவதையே தவிர்க்க முயன்றுவருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவை கூட பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் உணவு கொடுத்தாலும் கூட குடிக்க நீரின்றி எப்படி வாழ்க்கையை ஓட்டுவது. மும்பையிலுள்ள அம்பேத்கர் நகர் குடிசைப்பகுயில் 150க்கும்மேற்பட்ட குடும்பங்கள் இந்நிலையில் உள்ளன. இங்கு தினசரி காலையில் தண்ணீர் லாரி இரண்டுமணி நேரம் நீர் விநியோகம் செய்கிறது. இதில் தண்ணீரைப் பிடிப்பவர்கள் அதனை அன்று துணிதுவைக்க அல்லது குளிக்கத்தான் பயன்படுத்த முடியும். இரண்டில் ஏதாவது ஒன்று என்ற நிலைமையில்தான் தண்ணீர் அவர்களுக்கு கிடைக்கிறது. நீர்த்தொட்டி போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் நீரை அதன் மூலம் சேமிக்கவும் முடிவதில்லை.

உலக சுகாதாரம் பெருந்தொற்று பாதிப்பால் பாதிக்கப்படாமலிருக்க மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வலியுறுத்தி வருகிறது குடிக்க, அன்றாடத் தேவைகளுக்கான நீருக்கே போராடி வரும் இந்தியா போன்ற ஏழை நாட்டில், கைகளை அடிக்கடி கழுவும் நீர் கிடைப்பதே கடினம்தான். இதில் பாதுகாப்பு எப்படி கிடைக்கும்.

ஜல்சக்தித் துறை தனிநபர்கள் ஒருவருக்கு 55 லிட்டர் நீரை குழாய் மூலம் வீட்டுக்கு அளிக்க திட்டம் (2024) வகுத்திருந்தது. பெருந்தொற்று பிரச்னை காரணமாக அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னார்வ அமைப்பான வாட்டர் எய்டு அமைப்பு 1.4 பில்லியன் மக்களுக்கு அவசியத்தேவையான நீர் அருகில் கிடைப்பதில்லை என்று கூறியிருக்கிறது. அதாவது 7 சதவீத மக்களுக்கு.

நகரங்களில் மாநகராட்சி தன் வாகனங்கள் மூலம் நீரை மக்களுக்கு அளித்து வருகிறது. கிராமங்களில் கிராம பஞ்சாயத்து நீர் விநியோகப்பணிகளைச் செய்கிறது. அதுவும் கூட இப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து நீரை பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்தால் மக்கள் தனியார் நீராதராங்களுக்கு சென்று அதிக பணத்தை செலவழிக்கும் நிலை இல்லாமல் இருக்கும்.

பல தனியார் நிறுவனங்களில் பெருந்தொற்று கால சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு வழிப்பறிக் கும்பல் போல நடந்துகொண்டு நீருக்கான பணத்தை உயர்த்தியுள்ளனர் என்கிறார் பானி ஹக் சமிதியைச் சேர்ந்த சீதாராம் ஷெலர்.

இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவு 40 சதவீதமாக இருக்கிறது. உலகவங்கி உலகளவில் இந்தியா பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவு 25 சதவீதமாக உள்ளது என்று அறிக்கையில் கூறியுள்ளது. நாம் இப்போது பயன்படுத்தும் அளவு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தினால் அடுத்த இருபது ஆண்டுகளில் 25 சதவீத வேளாண்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வரும் ஜல்யுக்த் சிவர் அபியான் திட்டம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது, தூர்ந்துபோனவற்றை தூர்வாரி புனரமைப்பது என இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மும்பையில் வீடுகளுக்கு நீரை அளிக்கும் பணியில் கார்ப்பரேஷன் முனைப்பாக உள்ளது. ஆனாலும் அப்பணியைத் தடுப்பதில் உள்ளூர் குண்டர்கள், அரசியல்வாதிகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நீர் அளிக்கும் பணியை கார்ப்பரேஷன் செய்ய விரும்பவில்லை.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்