நியூஸ் ரூம்- ஆக்கப்பூர்வமான செய்திகள் ஐந்து !



TV Newsroom to Classroom: What One Prof Learned at His Summer ...





ஓஹோ

ஸ்மார்ட் லாக்டௌன்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பொதுமுடக்கம் ஜூன் 30 வரை உள்ளது. இதற்குப்பிறகு நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் ஸ்மார்ட் லாக்டௌன் அமலாக வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று உள்ள தெருக்களில் தீவிரமாக கண்காணித்து புதிய நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் ஸ்மார்ட் லாக்டௌன். இம்முறையில் திரு.வி.க நகர், கே.கே. நகரில் எம்.ஜிஆர் நகர் ஆகிய பகுதிகள் பாதிப்பிலிருந்து நீங்கியுள்ளன.

அடச்சே!

ஆப்கனில் பயங்கரம்!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருவர், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். சர்க்கி எனும் பகுதியின் அருகே பயணி ஒருவரின் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு செயல்பாட்டாளர்களின் இறப்பிற்கு, ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆஹா

கொரோனா குழந்தைகள்!

கோவிட் -19க்கு எதிராக உலக நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸில் இதனால் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என பிலிப்பைன்ஸ் பாப்புலேஷன் இன்ஸ்டிடியூட் கணித்துள்ளது. குடும்பக்கட்டுப்பாட்டு வசதிகள், மாத்திரைகள், ஆணுறை ஆகியவற்றை பெறமுடியாததால் குழந்தைகளின் பிறப்பு 2 லட்சத்து, 14 ஆயிரமாக அதிகரிக்கும் என இக்கழகம் மதிப்பிட்டுள்ளது.

அப்படியா?

நோய்எதிர்ப்புக்கு இனிப்பு1

மேற்கு வங்க அரசு அடுத்த இரண்டு மாதங்களில் ஆரோக்ய சந்தேஷ் என்ற நோய்எதிர்ப்பு சக்தி தரும் இனிப்பை சந்தைப்படுத்த உள்ளது. பசுவின் பாலிலிருந்து பெறப்பட்ட நெய், தேன் ஆகியவை சேர்த்து இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. உடலின் ஒட்டுமொத்த நோய்எதிர்ப்பு சக்தியை சந்தேஷ் ஊக்கப்படுத்துகிறது என கால்நடை வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

 

Instagram working on new ‘Voice Note’ feature for Threads app

Instagram is reportedly working on a new feature that will help users keep track of what’s being said on a video in its own Threads app. The application was built separately for an Instagram user’s close friends. Within the app, the video platform is expected to get this new ‘Voice Note’ feature.This new feature was first reported by developer and leakster Alessandro Paluzzi. He claimed that the new feature will automatically turn audio in videos to live captions.

 


படக்குறிப்பு:

வெனிசுலாவில் உள்ள காரகாஸ் நகரில் தண்ணீர் பஞ்சம் தீவிரமடைந்துள்ளது. பிளாஸ்டிக் டேங்கில் நீரைச் சேகரித்து தனது காரில் கட்டிவைத்து வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார் ஒருவர்.

நன்றி: அல்ஜசீரா


கருத்துகள்