ஆப்பிரிக்காவை வளர்த்தெடுக்க துடிக்கும் இளைஞர்! - ஃபிரெட் ஸ்வானிகர்
டைம் |
ஃபிரெட் ஸ்வானிகர்
ஆப்பிரிக்காவில் உள்ள கானா
நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் 44 வயதாகும் ஸ்வானிகர், ஆப்பிரிக்க தலைமைத்துவ அகாடமி
ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் சொத்து
என்று எதனைச் சொல்வீர்கள்? தற்போது அங்கு இளைஞர்கள் படை உருவாகிவருகிறது. ஆப்பிரிக்க
நாடுகளில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட இளைஞர்கள்தான். இளமையான
கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவருகிறது. 2100ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் பாதிக்கும் மேல்
இளைஞர்கள்தான் இருப்பார்கள்.
இந்த நேரத்தில்தான் நாட்டிற்கு சரியான தலைவர்கள் தேவை. இதனை ஃபிரெட் முன்னமே உணர்ந்திருக்கிறார். அதன் காரணமாகவே ஆப்பிரிக்க தலைமைத்துவ கழகம், தலைமைத்துவ நெட்வொர்க், தலைமைத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். இதன்மூலம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை அளிக்க முடியும் என நம்புகிறார்.
இம்முறையில் அவரது நாட்டை
இளைஞர்கள் கையில் கொடுத்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கு கனவு கண்டு வருகிறார் ஸ்வானிகர்.
அவரது கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.
-மோ இப்ராகிம்
நன்றி: டைம் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக