பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? - சில முக்கியமான பழக்கங்கள் இவை!









von miller overtime GIF by Old Spice







நிறைய பழக்கவழக்கங்களை உடனே மாற்றிக்கொள்ள முடியாதுதான். ஆனால் மாற்றிக்கொள்வது அப்பழக்கம் தீவிரமான குறைபாடுகளாக பின்னாளில் மாறுவதைத் தடுக்கலாம். அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

நகம் கடித்தல்

உலகிலுள்ள 44 சதவீத இளம் வயதினர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 19 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் பதற்றக்குறைபாட்டை நினைவுறுத்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவயதில் வாயில் விரலைப் போட்டுக்கொள்ளும் அல்லவா? அந்த பழக்கம் அப்படியே தொடர்வதன் காரணமாக நகங்களை கடித்து துப்புவது மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் உளவியலாளர் டோனன்ஃபீல்டு.

விரலைச்சூப்புவது

இது தாயிடமிருந்து பால்குடியை மறக்க முடியாமல் தவிக்கும் வளர்ந்த குழந்தைகளின் மனிநிலையை வெளிப்படுத்துகிறது. நான்கு வயது வரை சிலர் கைசூப்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அளவுக்கதிக சாப்பாடு

விரக்தி, மகிழ்ச்சி, சோகம் என எந்த உணர்வுகளின் வெளிப்பாட்டையும் சிலர் அண்டா சோற்றை உண்டே வெளிக்காட்டுவார்கள். இது தனிப்பட்டவர்களின் பாணி. இந்த உணர்வு ஏற்படுவதற்கு முக்கியக்காரணம், சாப்பிட்டால்தான் அவர்களது மூளையில் மகிழ்ச்சிகர நிறைவு எண்ணம் தோன்றும் என்பதுதான்.

யார் எதைக்கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவேன் என்று சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும்.

புகைப்பது

தாயின் முலைக்காம்பை மனதளவில் விட முடியாமல் தவிப்பவர்களின் பிரச்னை இது என ஓஷோ கூறுகிறார். அறிவியல் படி நிகோடினுக்கு அடிமையானவர்கள் அதனை அப்படியே சங்கிலியின் கண்ணியாக பழக்கத்தை தொடர்கிறார்கள்.

நகம் கடிப்பது நகங்களிலுள்ள நோய்க்கிருமிகள் வாயில் செல்வதற்கு வாய்ப்பு தருகிறது. சமூகரீதியாக பிறரிடம் நல்ல உறவை பராமரிக்காதவர்கள் நகம் கடிக்கிறார்கள். எனவே, பொதுஇடங்களிலும் அலுவலகத்திலும் நகம் கடிப்பது நல்ல பழக்கமாக ஏற்கப்படாது. விரல் சூப்புவதை தொடர்ந்தால் சக்திமான் தொடரில் வரும் கங்காதார் பாத்திரத்தின் பற்கள் போல உங்கள் பற்களும் மாறிவிடும்.

ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்