குற்றவாளிகளை ஒழிக்க கேங்ஸ்டராகும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! - கோலிமார்- பூரி ஜெகன்நாத்
tollywood blog |
கோலிமார்
இயக்கம்: பூரி ஜெகன்நாத்
இசை: சக்ரி
ஒளிப்பதிவு: ஷியாம் கே நாயுடு
கங்காராம், அனாதையாக உணவகம் ஒன்றில் வளர்கிறான். அவனுக்கு ஒரே நோக்கம்தான். எப்படியாவது காவல்துறையில் வேலை பார்க்கவேண்டும். உணவகத்தில் வேலை செய்து சம்பாதித்து அந்த லட்சியத்தை அடைகிறான். அப்போது அவன் மிக மோசமான மாஃபியா கும்பலை சந்திக்க நேரிடுகிறது. அவன் அவர்களை அழிப்பதற்கான குழு தலைவராகிறான். இந்த நேரத்தில் அவனுக்கு அனுசரணையாக இருந்த கமிஷனரின் டபுள் ஏஜெண்ட் தந்திரத்தில் வேலையை இழக்க நேரிடுகிறது. எப்படி அவன் தன் காதலியைக் காப்பாற்றிக்கொண்டு, ரவுடிகளை ஒழித்து தன் வேலையைக் காப்பாற்றிக்கொள்கிறான் என்பதுதான் படம்.
ஆஹா
படம் முழுக்க சண்டைதான். துப்பாக்கி தோட்டா படம் பார்க்கும் நம் கண், காது மூக்கில் கூட புகுந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. நாடி நரம்பு ரத்தமெல்லாம் ஆக்ரோஷம் பொங்க நடித்திருக்கிறார் கோபிசந்த். படம் முழுக்க சண்டைப்பிரியர்களுக்கானது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், ரோஜா, பிரியாமணியின் கதாபாத்திரங்கள்தான். முக்கியமான வில்லனாக நாசர் நன்றாக நடித்திருக்கிறார்.
ஐயையோ
சண்டைப் படம் என்பதுதான். இதனால் காதல், மோதல் இதற்கெல்லாம் குறைந்த நேரம்தான் படத்தில் இடம் உள்ளது. படத்தில் நிறைய காடசிகள் யூகிக்கும்படி இருக்கின்றன. நாசர் ஏன் டபுள் ஏஜெண்டாக மாறுகிறார் என்பதையெல்லாம் சொல்ல இயக்குநருக்கு நேரம் இல்லை. இதனால் படத்தில் ஆஹா என்று சொல்வதற்கான விஷயங்ள்ளும் குறைந்துவிட்டன.
இந்த படம் வெளியாகி இந்த ஆண்டோடு பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தீப்பொறி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக