லடாக்கை சீனா தாக்குவது புரியாத புதிராகவே இருக்கிறது!
outlook |
பீட்டர் ஃபிராங்கோபன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக
உலக வரலாற்று பேராசிரியர்.
இந்தியா
– சீனாவுக்கு இடையிலான மோதலை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியாவின்
பிரதமர் மோடி, சீன பிரதமர் ஜின்பிங் இருவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக தங்களது
எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இருநாட்டு உறவுகளில்
பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டோக்லாம் விவகாரமே இன்னும் இரு நாடுகளும்
மறந்திருக்க முடியாது. இதனால் திரும்பவும் ஆறிய புண்ணை கீறிவிடுவது பெரிய காரியமல்ல.
இரு நாட்டு தலைவர்களும் ஒருமனதாக சேர்ந்து ஒப்பந்தத்தை உருவாக்குவதே நல்லது.
லடாக்
பகுதியை சீனா ஏன் ஆர்வமுடன் கவனிக்கிறது. அங்கு நீர், கனிமங்கள் ஏதேனும் உள்ளதா?
நீரும்,
கனிமங்களும் எந்த நாட்டுக்கும் முகிகயமானதுதான். ஆனால், லடாக் அனைத்து நாடுகளும் எளிதாக
வந்து கனிமங்களை, வளங்களை எடுத்துச்செல்லும் இடமல்ல. இந்த நேரத்தில் எதற்கு சீனா, இந்தியாவுக்கு
அழுத்தம் கொடுக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
பெருந்தொற்று
பிரச்னை சீனாவிற்கு வரும் முதலீடுகளை தடுத்துள்ளதா?
பெருந்தொற்றுக்கு
முன்னேயும் முதலீட்டில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் முதலீட்டிற்கும் எதிர்பார்த்த விஷயத்திற்கும்
நிறைய வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. இப்போதும் சீனாவில் பல்வேறு நாடுகள் முதலீடுகள்
செய்து வருகின்றன. ஏன் அமெரிக்காவில் கூட சீனா, டிரம்பின் பல்வேறு தடைகளையும் சமாளித்து
வணிகத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதனோடு வணிக தொடர்புள்ள நாடுகள் அதனைத் தாண்டிய
பதற்றம் நிரம்பிய ஏற்றத்தாழ்வான உறவுகளே கொண்டுள்ளன.
டைம்ஸ்
ஆப் இந்தியா
ஸ்ரீஜனாமித்ராதாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக