இந்த உலகம், பூமி என்னுடையது! - ஓவியர் லூசிடா ஹராடோ
ஓவியத்தின் நீண்ட வரலாறு!
லூசிடா ஹராடோ
1920ஆம் ஆண்டு பிறந்த மகத்தான
ஓவிய ஆளுமையை நான் 2017இல் அடையாளம் கண்டு பிரமித்தேன். சர்ரியலியசம், டைனடன் இயக்கம்,
மேஜிகல் ரியலிசம் ஆகிய தன்மையை உள்ளடக்கமாக கொண்டவை லூசிடாவின் ஓவியங்கள். இவருக்கு
தற்போது 98 வயதாகிறது. இவரது ஓவியங்களை செர்பனைட் கேலரியில் பார்த்தபோது, அதனுடன் தனித்துவதமான
உணர்வு ஏற்பட்டது போல இருந்தது.
தனித்துவமாக வரையப்பட்ட
பல்வேறு ஓவியங்களை கொண்டாலும், பெரும்பாலும் மக்களால் அடையாளம் காணப்படாதவராகவே இதுவரை
இருந்தார். தன்னுடைய 98 வயதில், இத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து புகழைப் பெறத் தொடங்கியுள்ளார்.
இவர் மனித உடல்களை இயற்கையிலிருந்து பிரிக்கப்படாத பகுதியாக பார்க்கிறார். மனிதர்கள்
எப்படி மொழி மூலம் பிறருடன் பாலம் அமைத்து தொடர்பு கொள்கிறார்களோ அதுபோல இவரது ஓவியங்கள்
வானத்தின் மீதும், பூமியின் மீதும் தீராத வேட்கையை வெளிப்படுத்துகின்றன.
லூசிடா, வெறும் ஓவியர் மட்டுமல்ல.
சூழலியலாளர், செயல்பாட்டாளரும் கூட. தனக்கான உடைகளை இவரே வடிவமைத்துக்கொள்கிறார். நான்
வாழ்க்கைக்கு என்றுமே இல்லை என்று கூறியதில்லை. உலகம் மற்றும் இந்த பூமி பற்றிய பொறுப்பு
எனக்கு உள்ளது என்கிறார்.
ஹான்ஸ் அல்ரிச்ட் ஓப்ரிஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக