வாசனையை அறிய முடியாத மனிதர்களும் உண்டா? மிஸ்டர் ரோனி பதில்கள்







Anosmia: Wonder what it's like to have no sense of smell? It ...
dailymail

மிஸ்டர் ரோனி

மாலையில் உடல் ஏன் சோர்வாகிறது?

உடல் சோர்வாகி உங்களுக்கு கொட்டாவி விடத்தோன்றுகிறது என்றால் அதற்கு உயிரியல் கடிகாரத்தின் இயக்கம்தான் காரணம். இதன் செயல்பாடுபடி, மதிய உணவுக்குப் பிறகு 2 -4 மணிக்குள் உங்களை தூக்கம் அசத்துகிறது. இதற்கு உடலில் தூக்கத்தை வரவழைக்க உருவாகும் மெலடோனின் சுரப்பு காரணம். இந்த சுரப்பு, உடலின் வெப்பநிலையைக் குறைத்து தூங்குவதற்கான மனநிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக மதிய உணவில் அதிக மாவுச்சத்தை எடுத்துக்கொண்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரலாம். 30 நிமிடங்கள் தூங்கி எழுந்துவிட்டு பணிகளை எப்போதும் போல செய்யலாம். இந்த முறையை அனைத்து அலுவலகங்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தால் தூக்கச்சோர்வு இருக்காது.

2

வாசனையை அறிய முடியாத மனிதர்களும் உண்டா?

அரிதானதான். வாசனையை நுகரமுடியாத மனிதர்களும் இந்த உலகில் பிறப்பது உண்டு. இதனால் அவர்களது வாழ்க்கை வீணாவது இல்லை. காபி தயாரித்தால் அதன் மணத்தை முகர்ந்து பார்த்து பருக முடியாது. கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாசனை அறியும் திறன் இல்லாமல் போய், நோய் கட்டுக்குள் வந்தபிறகு அத்திறன் கிடைத்திருக்கிறது. வாசனையை அறிய முடியாத குறைபாட்டிற்கு அனோஸ்மியா என்று பெயர். இந்த குறைபாடு மரபணு, பாம்புக்கடி, வைரஸ் பாதிப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.

3

மண் எதனால் உருவாகிறது?

மண் பூமியின் அடிப்பரப்பிலிருந்து உருவாகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள், சத்துகள், கனிமங்கள், இறந்துபோன தாவரங்கள், நீர் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணத்தினால்தான் விதைகள் விழுந்து சரியான சூழல் கிடைத்தால் வளர முடிகிறது. 90 சதவீத மண்ணையே நாம் விளைபொருளாக மாற்றி உண்டு வருகிறோம். மண் கார்பனை தேக்கி வைத்துக்கொள்வதோடு, இறந்த தாவரங்களை மட்க வைத்து நைட்ரஜன் சத்தை மண்ணில் தேக்கி வைக்கிறது. அதிக விளைச்சலை எதிர்பார்த்து நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களால் ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து மைதானம் அளவுக்கான நிலம் தன் வளத்தை இழந்து வருகிறது.

பிபிசி சயின்ஸ்போகஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்