அனைவருக்கும் சமநீதி! - மாற்றுப்பாலினத்தவருக்காக குரல் கொடுத்த இரு வழக்குரைஞர்கள்
அனைவருக்கும் சமநீதி
அருந்ததி கட்ஜூ, மேனகா குருசாமி
எல்ஜிபிடிக்யூ
சமூகத்தினருக்கு சட்டரீதியில் பெரும் தடையாக இருந்தது, 377ஆவது சட்டப்பிரிவு. இதன்மூலம்
மாற்றுப்பாலினத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கமுடியும். காலனியகால மனோநிலையில்
உருவாக்கப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கு இந்திய அரசியல்வாதிகளுக்கும் நேரமே கிடைக்கவில்லை.
ஆனால் அதனை இரு பெண்கள் கச்சிதமான வாதங்களை முன்வைத்து நீதிமன்றத்தை அணுகி வென்றனர்.
அன்புதான்
அனைத்தையும் விட பெரிது என நிரூபித்துள்ளனர். அதனால்தான் நாம் மனிதர்களாக இருக்கிறோம்
அல்லவா? அருந்ததி கட்ஜூ 1982ஆம்ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில்(பிரக்யாராஜ்)
பிறந்தார். உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள், சிவில் வழக்குகள் தொடர்பாக வாதாடும்
வழக்குரைஞராக உள்ளார்.
மேனகா
குருசாமி, ஹைதரபாத்தில் பிறந்த வழக்குரைஞர். இவர் 1974ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிறந்தவர்.
மனித உரிமை தொடர்பான வழக்குகள், மணிப்பூரில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான வழக்கு, சல்வா
ஜூடும் தொடர்பான வழக்கு, கல்வி உரிமை தொடர்பான வழக்கு ஆகியவற்றில் உச்சநீதிமன்றத்தில்
வாதிட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள கொலம்பியா சட்டப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா, நடிகை.
கருத்துகள்
கருத்துரையிடுக