ஊரை துண்டு போடும் பெருந்தலைகளை வெட்டி பலிபோடும் அடியாள்! - யக்னம் -2004
யக்னம் -தெலுங்கு 2004
இயக்கம் ஏ.எஸ். ரவிகுமார்
சௌத்ரி
இசை மணிசர்மா
ஒளிப்பதிவு சிஹெச்
ரமணா ராஜூ
கிராமத்தில் உள்ள
இருதலைவர்கள்(ரெட்டப்பா, நாயுடு) அந்த ஊரையே பகையால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற அடிக்கடி
ரகளை செய்து ரத்தக்களறியாக்குகின்றனர். இதில் ஒரு தலைவரின் வீட்டில் வேலைசெய்து வருபவரின்
மகன் சீனு, தலைவரின் மகள் சைலஜா மீது பிரியமாக இருக்கிறான். இருவரும் ஒருநாள் தங்களின்
குடும்பத்தோடு ஜீப்பில் போகும்போது, எதிரிகளின் சதியால் குண்டு வெடித்து அத்தனை பேரும்
பொசுங்கிப் போகின்றனர். அதில் தப்புவது சிறுமி சைலஜாவும் சிறுவன் சீனுவும்தான்.
அமேஸான் |
ஜீப்பை ஒட்டிய தந்தையும் வெடிவிபத்தில் இறந்துபோனதால் அனாதையாகிறான் சீனு. தலைவரின் வீட்டையே தன் வீடாக்கிக் கொள்கிறான். அப்போதிலிருந்து சீனுவை மனதில் வைத்து ரசிக்கிறாள் சிறுமி சைலஜா. அவள் நகரத்தில் படிக்கும்போதும் அதே பப்பி லவ், வாய் வைத்து ஊதிய பலூன் போல பெரிதாகிக்கொண்டே போகிறது. தன் தோழிகளைக் கூட்டிக்கொண்டு காதலனைக் காட்ட ஊருக்கு வருகிறாள். ஊர் அப்போதும் அந்த இரு தலைவர்களால் பலர் செத்தும், குற்றுயிருமாக கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் எதிரும் புதிருமான இரு தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். சீனுவின் எஜமானுக்கு ராஜீய பதவி, அதற்கு பதிலாக எதிரி தலைவனுக்கு அவனைக் கொல்லத் துடிக்கும் சீனுவின் தலை என முடிவாகிறது. சீனுவின் எஜமானனும் இதற்கு பேராசையோடு ஒப்புக்கொள்கிறான். இதற்கிடையில் சீனு, சைலஜாவின் காதலைத் தெரிந்து அதிர்ச்சி ஆகிறான். ஆனால் அவளின் காதலுக்கு மறுப்பும் சொல்ல முடியவில்லை. இந்த காதல் அவளின் அப்பாவுக்கு தெரியவருகிறது. என்னாகிறது சீனுவின் நிலை என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி.
ஆஹா
கோபிசந்த் அப்பாவியாக, தனக்கு எஜமான் இழைத்த அநீதி தெரிந்து
அடித்து நொறுக்குவது ஃபுல் பார்மில் இருக்கிறார். அவர் இருக்கும் ஆவேசத்தில் நமக்கே
இரண்டு அடி கன்னத்தில் விழுந்துவிடுவோமோ பயமாக இருக்கிறது. படம் முழுக்க வெட்டு குத்துதான்.
அதனால் சண்டைப் பிரியர்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.
ஐயையோ
ஷைலும்மா பாத்திரம்தான். பப்பி லவ்வை சீனுவே லூசுத்தனமா பேசாதீங்கம்மா
என பேசும்போதும் விரட்டி விரட்டி டூயட் பாடல் பாடி அவரை மடக்குகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர்
பாத்திரத்தில் பிரகாஷ் ராஜை தூங்கவைத்தும், பிரியாணி தின்ன வைத்தும் வீணடித்திருக்கிறார்கள். இந்தப்படம் தமிழில் மண்ணின் மைந்தன் என்ற தலைப்பில் வெளியானது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக