டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க முயன்று வருகிறோம்! - என்சிபிஐ தலைவர் திலீப் ஆஸ்பே








Sivakarthikeyan Soori GIF by Sun Pictures
ஜிபி






திலீப் ஆஸ்பே, தலைவர், இயக்குநர் என்சிபிஐ நிறுவனம்

 

பொதுமுடக்க காலத்தில் டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றம் எப்படி இருந்தது?

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட இருமாதங்கள் மக்கள் இணையவழியிஇல் பணப்பரிமாற்றம் செய்ய ஆர்வம் காட்டினார்கள். அவர்களுடைய பாதுகாப்பிற்கும் அவசியமான பொருட்களை பெறுவதற்கும் நாங்கள் உதவினோம். உதவி வருகிறோம். சுற்றுலா, ஹோட்டல் சார்ந்த பல்வேறு சேவைகளில் மக்கள் பணம் செலவழிப்பதை குறைத்துக்கொண்டார்கள். நாங்கள் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடிந்தவரை புதுமையான வழிகளைத் தேடி வருகிறோம்.

பணமதிப்பு நீக்கத்தின்போது பலரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாறினார்கள். இப்போது பெருந்தொற்று காரணமாக நிறைய பேர் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருகிறார்கள். அல்லவா?

நீங்கள் கூறியது உண்மைதான். ஆனால் சிறிய திருத்தம், முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகளால் நான் டிஜிட்டலுக்கு மாறியது, நம்முடைய கையாளும் வசதி சார்ந்துதான். இப்போது மக்கள் டிஜிட்டலுக்கு மாறுவது பாதுகாப்பு கருதி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதனால்தான் மத்திய அரசும், ஆர்பிஐயும் தொடர்ந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை பிரசாரம் செய்து வருகிறார்கள். நாங்களும் யுபிஐசலேகா என்ற வலைத்தளத்தை தொடங்கி இதுதொடர்பாக டிக்டாக் செயலியிலும் கூட போட்டிகளை நடத்தி வருகிறோம். பணத்தை கையில் எடுத்து செலவழிப்பவர்களை மெல்ல டிஜிட்டலுக்கு மாற்றி வருகிறோம். இது எளிதானது என்பதோடு, பாதுகாப்பானதும் கூட.

மக்களும் இதைப் பார்த்து ஏராளமானோர் யுபிஐ, ரூபே ஆகிய முறைகளுக்கு மாறி வருகின்றனர். பிறர் தனியார் சேவைகளுக்கும் மாறி வருகின்றனர்.

என்ன மாற்றங்களை கடந்த  இருமாதங்களாக செய்து வருகிறீர்கள்.

நேரடியாக வியாபாரிகள் மக்களிடமிருந்து பணத்தைப் பெறுவது இப்போது குறைந்துவிட்டது. சமூக இடைவெளி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் ஆதாரை மையப்படுத்திய பணப்பரிமாற்ற முறை செயல்பாட்டில் உள்ளது. வங்கிக்கு பணம் அனுப்பும் முறையும் அங்கு அமலில் உள்ளது. பணத்தைக் கையில் கொடுக்காமல் போன் மூலம் ஸ்கேன் செய்து அனுப்பும் வசதி நிறைய இடங்களில் பயன்படுகிறது. இனி இந்த வசதியை விரிவுபடுத்த நினைத்துள்ளோம்.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க முடியும் என நம்புகிறீர்களா?

இப்போது மக்கள் யுபிஐ வசதியை க்யூஆர் கோடு வழியாக பெற்றுக்கொண்டுதானே இருக்கிறார்கள். வியாபாரிகள் கூட நேரடியாக மக்கள் வருவதை விரும்பவில்லை. அனைத்து பொருட்களையும் நீங்கள் இணையம் மூலமே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும். நாங்கள் கொரோனா காலத்தில் பல்வேறு கவனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறோம்.

அவுட்லுக் மணி

அரிந்தம் முகர்ஜி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்