இந்தியர்கள் பொறுமையான நல்ல குணம் கொண்டவர்கள்! - நடிகர், அரசியல்வாதி சத்ருகன் சின்கா




Jimmy Fallon Bernie 2020 GIF by Bernie Sanders



சத்ருகன் சிங்கா, நடிகர், அரசியல்வாதி

இந்தியர்களிடம் உள்ள தனித்துவமாக நினைத்து பெருமைப்படும் விஷயம் என்ன?

பொறுமை கொண்டவர்கள். நல்ல குணமும் அறிவும் நிரம்பியவர்கள்.

கைபேசிகளால் பொதுஇடங்களில் பெண்களை பார்க்கும் பழக்கம் குறைந்திருக்கிறது என்கிறேன். ஒப்புக்கொள்கிறீர்களா?

அட கடவுளே, கைபேசி மூலம் இப்படியொரு நன்மை இருக்கிறதென கண்டுபிடித்திருக்கிறீர்களே? நான் இதை எதிர்பார்க்கவில்லை. உங்களது கருத்தை நான் ஏற்கிறேன்.

பதாய் ஹோ, சுப் மங்கள் ஜியாதா சாவ்தான், பேட் மேன், ஏக் டாய்லெட்: பிரேம் கதா போன்ற படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. தனிமனிதராக இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்.

சமூகம் கலாசார ரீதியாக வேகமாக முன்னேறி வருகிறது என்பதையே இந்த படங்கள் காட்டுகின்றன. இப்படங்களை உருவாக்குவது கடினம்தான். ஆனாலும் உருவாக்கி வென்றிருக்கிறார்கள். தனிமனிதராக இப்படங்களிலிருந்து கற்பது, அவரவர் மனநிலை, விருப்பம் சார்ந்த ஒன்று.

அரசியல்வாதிகள் கட்சிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே என்ன காரணம்?

அப்படி கட்சி மாறி செல்லவில்லையெனில் அவர்களுக்கான இடம் கிடைக்காது. பதவிக்கான பேராசைதான் கட்சி மாறி செல்ல தூண்டுகிறது.

வெப்பமயமாதல், தகவல் சேகரிப்பு, தேசியவாதம் தொடங்கி பொருளாதாரம் சரிவு வரை நாட்டில் நடந்துவருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை நீங்கள் எப்படி அளவிடுகிறீர்கள்?

கோவிட் -19 நோய்த்தொற்றையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் எந்த விடைகளுக்கும் இடமில்லை.

விவசாயத்துறை தொழில்துறை போன்றோருக்கு அரசு நிதி ஊக்கத்தொகை அளிக்கிறார்கள். அப்படி பார்த்தால் சினிமா துறையும் கூடத்தானே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருமானம் இன்றி கிடக்கிறது. அவர்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கவேண்டுமென்கிறேன் நான். உங்களது கருத்து?

விவசாயிகள் சினிமா துறையினர் அளவுக்கு சம்பாதிப்பதில்லை.உணவின்றி பலரும் சாலையில் நின்று கையேந்தி பிச்சை கேட்டு வருகின்றனர் என்பதால் அவர்களுக்கு நிதி ஊக்கத்தொகை அத்தியாவசியம். சினிமாத்துறையினர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதால் ஏற்படும் நஷ்டத்திற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் என்பது எனது விருப்பம்.

பீகாரிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருக்கின்றன. அப்புறம் ஏன் அந்த மாநிலத்தை ஏழை மாநிலம் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இது அரசியல்வாதிகளைப் பற்றிய ஜோக் போல படுகிறது. உண்மையில் அம்மாநில மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.

மாற்றுப்பாலினத்தவர் சார்ந்த படங்கள் இந்தியில் நிறைய வருகின்றன. அதனை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

குறிப்பிட்ட காலம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த படங்கள் உருவாகி வெளியிடப்படுகின்றன.

இந்த உலகம் வேகமாக மாறிவருகிறது. இந்த பரபரப்பிலும் நம்மை நாம் தக்கவைத்துக்கொண்டு வாழ ஐந்து நல்ல விஷயங்களைச்சொல்லுங்கள்.

ஒருவரின் திறமையை பாராட்டுங்கள்.

கல்வி பயிலுங்கள்

கடவுளை நம்புங்கள்

உங்கள் இரு கைகளையும் நன்றாக கழுவுங்கள்ய

யோகா பயிலுங்கள்.

இன்று வெற்றி பெற்றவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக, ஆணவத்தோடு நடந்துகொள்கிறார்களே?

மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளாக காமம், குரோதம், லோபம் ஆகிய உணர்ச்சிகள் மேலோங்கியவர்களாக அவர்கள் இருப்பதுதான் காரணம். நான் அப்படியில்லை. தினசரி தியானமும், யோகாவும் பயின்று செய்து வருவதுதான் இதற்கு காரணம்.

இன்றைக்கு நடக்கும் திரும்ண விழாக்கள், மண உறவை விட நீளமாக நீள்கிறதே?

அது சிலரைப் பார்த்து செய்து பழக்கமாகிவிட்டது. எனது திருமண விழாவுக்கு ஒருநாள் தான் செலவழித்தேன். அதேசமயம், ஒரு நேரத்தில் ஒரு பெண்ணைத்தான் மனைவியாக கைபிடித்தேன்.

பிலிம்பேர்

தேவேஸ் சர்மா


கருத்துகள்