மக்களுக்கு இப்போது செலவு செய்யாத அரசு, எப்போது செலவு செய்யும்? - கேசவ் தேசிராஜூ முன்னாள் சுகாதாரத்துறை செயலர்






Former health secretary Keshav Desiraju joins PFI as its ...
பாபுலேஷன் பவுண்டேஷன்

மொழிபெயர்ப்பு நேர்காணல்

கேசவ் தேசிராஜூ, முன்னாள் சுகாதாரத்துறை செயலர்

  

கோவிட் -19 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் என்று விவாதம் தனியாக நடந்துவருகிறது. நாம் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும்?

உலகம் நிறைய மாறியிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக நாம் இப்போது நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுள்ளோம். நிறைய தொற்றுநோய்களை அறிவியலால் எதிர்கொண்டு வந்துள்ளோம். ஆனால் இப்போது கோவிட் -19 நோய்த்தொற்று நம்மை முழந்தாள் பணிய கீழே விழ வைத்துள்ளது. இதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்வது எதிர்காலத் தலைமுறையினரைக் காக்கும்.

நோய்த்தொற்று மதம், இனம், மொழி சார்ந்து ஏற்படுவதில்லை. இதற்கு காரணமாக குறிப்பிட்ட இனத்தவரை சுட்டிக்காட்டுவது தவறானது.

பொதுமுடக்க காலகட்டத்திலும் நகரத்தைச்சேர்ந்த நடுத்தர வர்க்கம் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு நடந்துகொண்டது வேதனை அளிக்கிறது. அவர்கள் விதிகளை சரியாக கடைபிடித்திருந்தால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வாய்ப்புண்டு.

செவிலியர்களை, ஆஷா பணியாளர்கள் சரியான முறையில் நோய்த்தொற்று சார்ந்து பயிற்சிகளை அளித்து அவர்களை தகுதிப்படுத்துவது அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் விஷயத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுவது அவசியம். சுகாதாரம் தொடர்பான மசோதா 2018ஆம்ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்னும் நாடாளும்ன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமாகவில்லை. செவிலியர்களை பயிற்றுவிப்பதற்கான நிறைய கல்லூரிகளை உருவாக்குவது அவசியம்.

அரசு மருத்துவமனைகளுக்கு நிதியை குறைத்து தனியார் மருத்துவமனைகள் மக்களுக்கு சேவை செய்யும் என அரசு நம்பி வந்தது. அந்த எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ளவேண்டிய நேரமிது. தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்பாக மூடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்தான் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இப்போதேனும் அரசு சரியான பாடத்தை கற்றிருக்கும் என நம்பலாம். அரசு மருத்துவமனைகள் அவை சார்ந்த அமைப்புகளுக்கு இனி வரும் காலத்தில் அதிக நிதி வசதிகளை அளிப்பது முக்கியம்.

பொது சுகாதாரத்தை பேசும்போதெல்லாம் பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகள் பற்றி பேசுகிறார்களே?

இப்போது வணிகம் சார்ந்த புள்ளிகள் சரிவு, வருமானம் இன்மை பற்றி பேச முடியாது. ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சில மாதங்களுக்கு சம்பளமின்றி இருக்கும் சூழல்தான் நிலவுகிறது.

அதோடு பொதுமுடக்க காலத்தில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் குடும்ப  வன்முறை விவரங்களை வேறு தனியாக நம்மை மிரட்டுகின்றன. இக்காலகட்டத்தில் தேவையற்ற கருவுறுதல்களும் நிகழும்.

நகரங்களை விட்டு செல்லும் தொழிலாளர்களை இங்கே தங்க வைக்க அரசு முகாம்களை அமைக்கலாம். தேவையெனில் இதற்கு தனியார் இடங்களைக் கூட பயன்படுத்தலாம். நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே வணிக நடவடிக்கைகளைத் தொடர முடியும். அவையன்றி, அரசு வேறு முயற்சிகளை செய்தால் பெரிய பலன்கள் இருக்காது. அரசு மக்களுக்காக இப்போது செலவு செய்யாவிட்டால், வேறு எப்போது செலவு செய்யும்?

2012ஆம் ஆண்டு இந்தியாவில் நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான அமைப்பு ஒன்றைத் தொடங்கினர். இது அமெரிக்காவிலுள்ள நோய்த்தடுப்பு அமைப்பு ஒத்தது. காகித அளவில் இதன் செயல்பாடுகள் இருந்ததே ஒழிய வேறு செயல்பாடுகளே இல்லாமல் போய்விட்டதே?

என்சிடிசி இதுபற்றிய பல்வேறு பயிற்சிகளை நடத்தியது உண்மைதான். ஆனால் மாநிலங்களுக்கு ஆர்வம் இல்லாதபோது என்ன செய்வது? பொதுமக்களுக்கான நோய்த்தடுப்பு திட்டம் என்பதால் யாரும் இதனைப் பெரிதாக நடைமுறைப்படுத்த ஈடுபாடு காட்டவில்லை.

அரசு, தொற்றுநோய்களுக்கான தனி மருத்துவமனைகளைத் தொட்ங்கியிருந்தால் இப்பிரச்னையை நாம் எளிதாக கையாண்டிருக்க முடியுமா?

இதற்கென தனி மருத்துவமனைகள் தேவையில்லை என்பது எனது கருத்து. நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகள் மட்டும் 750 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இத்தகைய மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை, நோய்த்தொற்று, கண், காது, மூக்கு என பல்வேறு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். சிறப்பான அறுவைசிகிச்சைகளை அரசு மருத்துவர்களே செய்து வருகிறார்கள். அனைத்து விதமான அவசர நிலைமைக்கான மருத்துவங்களையும் அரசு மருத்துவமனையில் செய்யமுடியும். சரியான கருவிகள், செவிலியர்கள் இருந்தால் நோய்த்தொற்று பிரச்னையை எளிதாக தீர்க்க முடியும். ஆனால் அப்படி இல்லாமல், அரசு மருத்துவமனையை தனியாருக்கு கொடுத்தால் அனைவருக்குமான சிகிச்சை என்பது கிடைக்காது. ஆனால் அவர்கள் இலாபத்தில் கொழிக்க அதிக வாய்ப்புள்ளது.

 ஃபிரன்ட்லைன்

ஆங்கிலத்தில்: ஆர்.கே. ராதாகிருஷ்ணன்


கருத்துகள்