இன்னும் எத்தனை கோடிப் பேர்களை பூமி தாங்கும்? - மிஸ்டர் ரோனி
மிஸ்டர் ரோனி
நாக்கை கடித்துக்கொண்டால் வேகமாக குணமாவது எப்படி?
இதற்கு காரணம், நமது எச்சில்தான். அதிலுள்ள ஹிஸ்டாடின் 1 என்ற அமினோ அமிலம் சேதமடைந்த செல்களை வேகமாக மாற்றி புதிய செல்களை அங்கு உருவாக்குகிறது. காயமான உடலிலும் கூட இந்த அமினோ அமிலம்தான் புதிய செல்களை உருவாக்கி காயத்தை ஆற்றுகிறது.
ஆப்பிளை கடித்தவுடன் அதன் நிறம் பழுப்பாக மாறுவது ஏன்?
அதிலுள்ள டானிஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தை உருவாக்குகிறது., எனவே ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே விடாமல் முழுக்க சாப்பிட்டால் இதுபோன்ற கேள்விகளை உங்களுக்கு கேட்கத் தோன்றாது. ஆப்பிளிலுள்ள என்சைம் அதன் வகைகளைப் பொறுத்து மாறும். ஆப்பிள் நீங்கள் அணில் போல கடித்து கொறித்த தடம் மாறாமல் இருக்க, அதனை நீரில் அல்லது சர்க்கரையில் வைக்கவேண்டும். இப்போது ஆக்சிஜன் மூலம் ஏற்படும் வேதிவினை நிகழாது.
எத்தனை கோடி மக்கள் வாழ்வதற்கு பூமி உதவும்?
பத்து அல்லது பதினொரு பில்லியன் மக்கள் வாழ பூமி உதவும். இப்போது நாம் 7 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டோம். இந்த எண்ணிக்கையும் இப்போது கூடி வருகிறது.பூமி மாதா எப்போது வாயைப் பிளப்பாள் என்று தெரியவில்லை. ஆனால் உலகம் அழிவதற்கான ஆரூடத்தை இப்போதும் யாரேனும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜெட் எஞ்சினை கார்களில் பயன்படுத்தலாமா?
நமது நகரங்களில் உள்ள நெரிசலான போக்குவரத்தில் ஜெட் எஞ்சின்களை எப்படி பயன்படுத்துவீர்கள்? இப்போதும் கார்களில் ஜெட் எஞ்சின்களை பயன்படுத்துகிறார்கள் . எங்கு தெரியுமா? ரேஸ்களில். வேகமாக செல்ல ஜெட் எஞ்சின்கள் உதவும். ஆனால் அவசரநிலைக்கு டக்கென வண்டியை நிறுத்துவது கடினம். வண்டிகளின் வடிவமைப்பில் நிறைய மாறுதல்களை செய்தால் ஜெட் எஞ்சின்களை பயன்படுத்தலாம் அதற்கான சவால்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக