ஆறு முயற்சிகளில் ஒன்றில்தான் சிறுத்தை வெற்றிபெறும்! - தி ஹன்ட் தொடர் தயாரிப்பாளர் ஹியூ கார்ட்டி





The Hunt (TV Mini-Series 2015) - IMDb
bbc










என்னதான் டிவிக்களின் திரைப்படங்கள், சீரியல்கள் பார்த்தாலும் இயல்பாகவே மனம் அனைத்திலும் சலிப்புறுகிறது. இறுதியில் தஞ்சமடைவது இயற்கையிடம்தான். அதனால்தான் பிபிசி எர்த் சேனல் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அதில் செவன் வேர்ல்ட்ஸ், ஒன் பிளானட் ஆகிய டிவி தொடர்களை தயாரித்த ஹியூ கார்டியிடம் பேசினோம்.

ஹன்ட் என்ற தொடரை தயாரிது வருகிறீர்கள். இதன் சிறப்புகள் என்ன?

இந்த தொடரில் சில குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே பின்தொடர்ந்து படம்பிடிக்கவிருக்கிறோம். இத்தகையை தொடரை உருவாக்க ஒன் பிளானட், ஃப்ரோஸன் பிளானட் ஆகிய தொடர்கள் ஊக்கம் தந்தன. இந்த தொடர் விலங்குகளின் வாழிடம், அதன் வேட்டையாடும் குணம் ஆகியவற்றைப் பேசுகிறது.

தொடரில் உங்களைக் கவர்ந்த விலங்கு எது?

அனைத்து விலங்கினங்களிடமும் ஒரு சிறப்பியல்பு உண்டு. அவற்றை பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று கூற முடியாது. கில்லர் திமிங்கலங்கள், நைல் முதலைகள் ஆகியவற்றில் பொறுமையும், புத்திசாலித்தனமும் எனக்குப் பிடிக்கும். ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது சிறுத்தைப்புலி ஒன்றுதான். ஆறு முயற்சிகளில் ஒன்றில்தான் வெல்லும் திறன் பெற்றது சிறுத்தைகள். அதில் ஒன்று வேட்டையாடச்சென்று ஆறு நொடிகளில் இரையைப் பிடித்தது மறக்கமுடியாத காட்சி.

இப்படி படம்பிடிக்கும்போது என்ன விதமாக திட்டங்களை பின்பற்றுவீர்கள்?

மறைந்து இருந்த படம்பிடிப்பதுதான் விலங்குகளை படம்பிடிப்பதில் பயன்படுத்தும் முக்கியமான டெக்னிக். ஆனால் நாங்கள் இம்முறை சினிஃபிளெக்ஸ் பயன்படுத்தி ஹெலிகாப்டரிலிருந்து புகைப்படம் எடுப்பது போல விலங்குகள் வேட்டையாடுவதை பதிவு செய்தோம். காட்டு நாய்களின் வேட்டை, புலியும் சிறுத்தையும் நேருக்கு நேராக சந்திப்பது, எலிஃபிளெக்ஸ் வகை லென்ஸ்களை பயன்படுத்தி புலிகளைப் படம்பிடித்தோம். புலிகள் யானைகளை தங்களுக்கு எதிரிகளாக கருதுவதில்லை.

படப்பிடிப்பில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்றைச்சொல்லுங்கள்.

ஒன்றல்ல நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் கரடி ஒன்றை பின்தொடர்ந்து சென்ற சம்பவத்தை குறிப்பிடலாம். ஒளிப்பதிவாளர் ரோல்ஃப் ஸ்டெய்ன்மேனை துருவக்கரடி துரத்தி வந்தது. இவரது ஒளிப்பதிவுக் கருவிகள் கூட கடலில் விழுந்த சம்பவங்கள் நடந்தன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

இன்டல்ஜ் குழு

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்