மனிதநேயமிக்க திரைப்படக் கலைஞர், உரிமைக்கான போராளி - பிரை லாரிசன்






Brie Larson reveals her body transformation for Captain Marvel ...


சகலகலா மனுஷி!

பிரை லார்சன்

மார்வெல் படத்தின் சூப்பர் ஹீரோவாக நடித்தவர். திரையிலும் சரி, திரைக்கு வெளியிலும் சரி நாயகியாகத்தான் ஜொலிக்கிறார். காரணம், அவரது பாலின பாகுபாடு, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார். அவரது படம் பல கோடி ரூபாய் வசூலித்தது என்பதைத் தாண்டி கவனம் ஈர்க்கும் மனுஷியாக இருக்கிறார்.

இளைஞர்களுக்கான நிகழ்வுகளிலும் நாற்காலியில் அமர்ந்து இருப்பதை நாம் பார்க்கலாம். சினிமாக்களில் நாம் என்ன விஷயங்களை தவறவிடுகிறோம் என்பதை பவர் பாய்ண்ட் விஷயங்களோடு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கும் ஆச்சரியங்களையும் பிரை லார்சன் ஏற்படுத்துகிறார். இது பல்வேறு துறைகளிலும் பெண்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் காலம். மார்வெல் படங்களில் முக்கியமான நடிகையாக அவர உருவாகி வரும் வாய்ப்பு உள்ளது. லார்சன் ஒரே நேரத்தில் ஜாலியான, கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களிலும் பங்குகொண்டு நம்மையும் அவர்பால் கவனிக்க வைக்கிறார்.

டெஸா தாம்சன்

டைம்


கருத்துகள்