தொழிலாளர்களுடைய முகத்தில் வரும் நிம்மதியான சிரிப்பு எனக்குப் போதும்! - நடிகர் சோனு சூட்
நிஜ
ஹீரோ இவர்தான்!
சோனு
சூட்
பல்வேறு
தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து நாயகர்களிடம் அடிவாங்கி தோற்றுப்போகும்
பாத்திரங்களில்தான் அறிமுகம். கொரோனா காலத்தில் தனது ஹோட்டலை நோயாளிகளுக்கு தங்குமிடமாக
மாற்றிக்கொடுத்தவர். ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல வாகனங்களை
ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
மும்பையில்
இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?
மும்பையில்
இப்போது தங்கள் ஊருக்குச்செல்ல 10ஆயிரம் பேர் வரிசையில் நிற்கின்றனர். நான் இதுவரை
35 ஆயிரம் பேரை அவர்களுக்கு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
உங்களுடைய
தினசரி நாட்கள் எப்படி செல்கின்றன?
நான்
கடந்த நான்கு நாட்களாக தூங்கவில்லை. இடம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக வீட்டுக்கு
அனுப்பி வைக்க உழைத்து வருகிறேன். ஒரு நாளுக்கு முப்பது மணிநேரங்கள் இருந்தால் நன்றாக
இருக்கும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.
தொழிலாளர்களுக்கு
உதவி செய்யவேண்டுமென்று எப்படி தோன்றியது?
அவர்கள்
முகத்தில் தோன்றும் மனநிறைவான சிரிப்புதான். அதுதான் என்னை தீவிரமாக உழைக்கத் தூண்டுகிறது.
கர்
பேஜொ திட்டத்தை எப்படி தொடங்கினீர்கள்?
இந்த
திட்டத்தை நானும் எனது நண்பர் நிதி கோயலும் தொடங்கினோம். ஏறத்தாழ எங்களது சேமிப்பு
கூட தீர்ந்துவிட்டது. இனிஇ மக்களிடம் உதவிகளைப் பெற்றுத்தான் செயல்பாடுகளை செய்யவேண்டும்.
நீங்கள்
அரசியலுக்கு வரப்போவதாக வதந்திகள் பரவுகிறதே?
நான்
இப்போது இருக்கும் இடத்திலேயே நன்றாக இருக்கிறேன். எனக்கு அரசியல் ஆசை கிடையாது.
தொழிலாளர்களுக்கான
ஆவண பணிகள் எளிமையாக இருந்ததா?
அவை
மனத்தையும் உடலையும் சோர வைக்கும்படிதான் இருந்தன. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர்,
மருத்துவர் என பலரிடமும் சான்றிதழ்களைப் பெற்றுத்தான் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி
வைத்து வருகிறோம்.
நீங்கள்
எப்படி உங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறீர்கள்?
எனது
வீட்டில் எனது பாதுகாப்பைப் பற்றிய பயம் இருக்கிறது. நான் சமூக இடைவெளியைப் பேணி வருகிறேன்.
பாதுகாப்பு விஷயங்களைக் கடைபிடித்து வருகிறேன்.
நன்றி:
தி வீக்
ஆங்கிலத்தில்:
ஸ்னேகா புரா, அஞ்சலி மாத்தாய்
கருத்துகள்
கருத்துரையிடுக