தெறிக்கவிடும் தனிக்குரல் கலைஞன்! - ஹஸன் மினாஜ்









Indian-American comedian, 'Patriot Act' star Hasan Minhaj to host ...
nie









ஹஸன் மினாஜ்

தெறிக்கவிடும் தனிக்குரல் கலைஞன்

இந்திய அமெரிக்க முஸ்லீம். டிரம்பின் தேசத்திலிருந்து அவரையே கிண்டல் செய்து பேசும் துணிச்சலான கலைஞன். 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பிறந்தவர். அமெரிக்காவில் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றார். பின்னாளில் நெட்பிளிக்ஸின் பேட்ரியாட் ஆக்ட் நிகழ்ச்சி மூலம் உலகிலுள்ள அனைவருக்கும் முகம், குரல் தெரிந்த தனிக்குரல் கலைஞனானார். 2014 முதல் 2018 வரை டிவியில் டெய்லி ஷோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

”நான் ஹசனை 2014ஆம் ஆண்டி டெய்லி ஷோ வித் ஜான் ஸ்டூவர்ட் நிகழ்ச்சியில்தான் சந்தித்தேன். அப்போது நாங்கள் அத்துறைக்கு புதியவர்கள். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹசன், புதியவராகவும், அவரின் குரல் பல லட்சம் மக்களை ஊக்கமூட்டுவதாகவும் மாறியுள்ளது. ஆச்சரியமாக உள்ளது. இன்று அமெரிக்கா என்றால் ஹசன், ஹசன் என்றால் அமெரிக்கா என்று கூட சொல்லலாம். காரணம், அந்தளவு அவர் மக்களின் முன்னே பல்வேறு அமெரிக்கா, தன்னுடைய நாடு சார்ந்த பல்வேறு கலாசாரங்களை நையாண்டியுடன் பேசி வருகிறார்.” என்கிறார் அவருடன் பணிபுரிந்த டிராவர் நோவா.


கருத்துகள்