அமெரிக்க வரலாற்றை உருக்கமாக சொல்லும் கதைசொல்லி! - லின் நோட்டேஜ்
உருக்கமான கதை சொல்லி - லின் நோட்டேஜ்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில்
பிறந்த நாடக எழுத்தாளர். இவர் தனது ரூய்ன்டு, ஸ்வெட் என்ற இரு நாடகங்களுக்காக புலிட்சர்
பரிசை இருமுறை பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் பண்பாடு, கலாசாரம் சார்ந்து நாம் கேட்க
விரும்பாத கதைகளை நாடகமாக மாற்றுகிறார். இப்போதைக்கு அமெரிக்காவில் உள்ள இலக்கியவாதிகளில்
அனைத்து கலை வடிவங்களிலும் செயல்படுகிற திறன் உடையவர் லின் மட்டும்தான்.
வறுமையில்
வாடும் அமெரிக்கர்களின் வாழ்க்கை, அவர்களின் இனவெறி ஆகியவற்றைப் பற்றியும் நாடகமாக
எழுதியுள்ளார். தனது நாடகங்களுக்காக விரிவாக ஆராய்ச்சி செய்து தனது கதாபாத்திரங்களை
உயிரோட்டமாக உருவாக்கி பார்வையாளர்களை நாடகத்தில் பிரிக்கமுடியாதவர்களாக மாற்றுகிறார்.
மனிதநேயம் குன்றாது கதைகளை உருவாக்கும் இவர் இனி வரும் காலங்களிலும் பல்வேறு உலகங்களைப்
பற்றிய கவனத்தை நம்மிடையே உருவாக்குகிறார் என நம்பலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக