அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மைதான்! - சஞ்சய் அகர்வால்








michael richards yes GIF





விவசாயத்துறை செயலாளர், சஞ்சய் அகர்வால்

வணிகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விவசாயிகளுக்கு எப்படி உதவும்?

நமது நாடு தற்சார்பு கொண்டதாக உருவாக விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகள் நிலப்பரப்பு சார்ந்த அறிவும், திறனும் கொண்டவர்கள். இவர்கள், நம் நாடு உணவு பாதுகாப்பும், தன்னிறைவும் பெற முக்கியமானவர்கள். தற்போதுள்ள சட்டங்கள் மூலம் தானியங்களை மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலத்திற்கும் கூட அவர்கள் விற்கலாம். இதன் காரணமாக, பொருட்கள் வீணாகாது. ஏபிஎம்சி அமைப்பின் உதவியால் விவசாயிகளுக்கு சரியான விலையும் கிடைக்கும்.

இந்த சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விவசாயத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக பஞ்சாப் அரசு கூறியிருந்ததே?

மத்திய அரசு சட்டத்திற்கு உள்பட்டே இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதன்காரணமாக விவசாயத்தின் மீதுள்ள மாநிலங்களின் உரிமை பறிபோகாது.

ஒப்பந்த முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?

இதுநாள் வரை பணப்பயிர்களை பயிரிட்டு வந்தவர்களுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகள்தான் ஏற்று வந்தனர். அதனை நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றியிருப்போம். அவர்களே விதைகள், பூச்சிக்கொல்லி தொழில்நுட்பத்தை அளிப்பாளர்கள். விளைபொருட்களுக்கான அதிகபட்ச விலையும் இவர்கள் மூலமாக விவசாயிகளுக்கு கிடைக்கும். விவசாயிகள் – விற்பனையாளர் ஆகியோரை இணைக்கும் 10 ஆயிரம் அமைப்புகளை அரசு உருவாக்கியிருக்கிறது. அறுவடைக்கு பிறகான பல்வேறு பணிகளுக்கு கிசான் கடன்கள், ஒரு லட்சம் வரையிலான கடன் பெறும் வசதியை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. தொழிற்சாலைகள் தேவையில்லாமல் விற்பனையை தாமதம் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டங்களையும் இயற்றியுள்ளோம்.

அவசியப் பொருட்களுக்கான சட்டம் பற்றி விளக்குங்கள்.

பதப்படுத்தும் துறைக்காக சமையல் எண்ணெய், பருப்பு, பயறு, வெங்காயம் ஆகியவற்றை அவசியமான பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளோம். இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய முன்வருவார்கள். விவசாயிகளுக்கும் தங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். சட்டங்கள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டால் 2022இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது உறுதி.

இந்தியா டுடே

ராஜ் சென்குப்தா


கருத்துகள்