நியூஸ் ரூம்: மாணவர்களை கற்க ஊக்கப்படுத்தும் ஜானகி டீச்சர்!










ஆஹா

வெளிப்படைத் தன்மை!

கேரள அரசு ஆட்டிசக்குறைபாட்டிற்கு தெரபி சிகிச்சை அளிக்கும் மையங்களுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 பிரிவு 51இன்படி விதிமுறைகள் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல் படி நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் ஆட்டிசக் குறைபாட்டு சிகிச்சை மையங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெரபி மையங்களை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் 3 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது.

நியூஸ்மினிட்

அட

புது வாத்தியார்!

சென்னையைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் அபிஷேக், திருமதி ஜானகி என்ற கற்பனை பாத்திரத்தை உருவாக்கி பிரபலமாகி உள்ளார். இப்பாத்திரம் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளித்தேர்வுகள் ரத்தான அறிவிப்பையொட்டி ஜூன் 9 அன்று உருவாக்கப்பட்ட திருமதி ஜானகி பேசும் வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்று வலம்வருகின்றன. இதனை உருவாக்கிய அபிஷேக், பொறியியல் பட்டதாரி ஆவார்.

அப்படியா?

சீனாவின் நடவடிக்கை!

ஹாங்காங்கில் சீன அரசு, தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இங்கு தேசிய பாதுகாப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு, தேசப்பாதுகாப்புக்கு விரோதமாக நடந்துகொள்பவர்கள் மீதும், விதிகளை மீறும் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. இச்சட்டம் மூலம் ஹாங்காங்கின் சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்படும் என இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் தரப்பு கூறுகிறது.

யுபிஐ

 

ஓஹோ...

சிரியமக்களுக்கு உதவி!

ஐ.நா அமைப்பு, விர்ச்சுவல் முறையில் சிரிய மக்களுக்கு நன்கொடை அளிக்க பல்வேறு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர், கோவிட்-19 பாதிப்பு ஆகியவற்றால் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 1 கோடி மக்களுக்கும் அதிகமானோருக்கு உதவி தேவைப்படுவதாக ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.

அல்ஜசீரா

 

International Asteroid Day

On 30 June, 1908, roughly more than 112 years ago, a large cosmic event shook the Podkamennaya Tunguska river area in Siberia, Russia. In what is believed to be the largest impact event on Earth in recorded history, it left "little evidence of its origin except flattening 500,000 acres of uninhabited forest, scorching the land, creating 'glowing clouds' and producing shock waves that were detected around the world," a recent Nasa feature recalls. Years later, the reason was revealed to be a "stony body", either an asteroid or comet, that exploded in the air.

லிவ் மின்ட்




படச்செய்தி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கோவிட் -19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், வேலை இன்றி தவிக்கும் வாகன ஓட்டுநர் தேவாலயத்தில் கொடுத்த இலவச உணவைப் பெற்றுவருகிறார்.


கருத்துகள்